முகப்பு வார இதழ்கள் மகளிர்மணி
கேரட் ஆரஞ்சு ஜூஸ்
By ஏ. காந்தி, செய்யாறு | Published On : 06th April 2022 06:00 AM | Last Updated : 06th April 2022 06:00 AM | அ+அ அ- |

தேவையானவை:
கேரட் - 1
ஆரஞ்சு - 2
எலுமிச்சம் பழம் - அரை பழம்
சர்க்கரை - 4 மேஜைகரண்டி
இஞ்சி - 1துண்டு
ஐஸ்க்யூப்ஸ்- தேவைக்கேற்ப
செய்முறை:
கேரட் மற்றும் இஞ்சியை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின் எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறை எடுத்து வைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரை கப் அளவு தண்ணீர்விட்டு சர்க்கரையைச் சேர்த்து மிதமான சூட்டில் பாகு காய்ச்சவும். பின்னர், கேரட் மற்றும் இஞ்சியை மிக்ஸியிலிட்டு அரைத்து வடிக்கட்டிக் கொள்ளவும்.
பின்பு ஒரு ஜூசர் மூலம் ஆரஞ்சு பழத்தில் இருக்கும் சாறை பிழிந்து எடுத்து, கேரட் சாறுடன் கலக்கவும். அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை சிரப்பை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சேர்த்து நன்கு கலந்து விடவும். அதனுடன் தேவைக்கேற்ப ஐஸ் கியூப்ûஸ சேர்க்கவும். தேனை விரும்புவர்கள் இதில் சர்க்கரை சிரப்புக்கு பதிலாக தேனை சேர்த்து கொள்ளலாம்.)