குண்டுமழைக்கு நடுவே தங்கம்!

ரஷிய ராணுவத்தின் படையெடுப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டு அகதியாக ஆன நிலையிலும் உக்ரைனைச் சேர்ந்த இளம்பெண் யாரோஸ்லேவா மஹுசிக் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்,
குண்டுமழைக்கு நடுவே தங்கம்!

ரஷிய ராணுவத்தின் படையெடுப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டு அகதியாக ஆன நிலையிலும் உக்ரைனைச் சேர்ந்த இளம்பெண் யாரோஸ்லேவா மஹுசிக் (20) உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்,

உலகின் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்கும் சிறப்பு விளையாட்டுக்கே உண்டு. குறிப்பாக கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ், வாலிபால் போன்று தடகள பந்தயங்களுக்கும் அதிக வரவேற்பு உள்ளது. ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைகள் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றனர்.

சர்வதேச தடகள சம்மேளனம் சார்பில் திறந்த மைதானத்தில் உலக சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுவது போல், உள்ளரங்க (இன்டோர்) உலக தடகளப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. நிகழாண்டு இன்டோர் தடகளப் போட்டிகள் செர்பிய தலைநகர் பெல்கிரேடில் நடந்து வருகின்றன.

தங்க மங்கை யாரோஸ்லேவா மஹுசிக்:

பெல்கிரேடில் நடைபெற்ற உலக தடகளச் சாம்பியன் போட்டி உயரம் தாண்டுதலில் 2.02 மீ உயரம் குதித்து தங்கம் வென்றார் உக்ரைனின் யாரோஸ்லேவா மஹுசிக். இதற்காக அவர் சந்தித்த போராட்டங்கள், சவால்கள் கடுமையானவை ஆகும். பல்வேறு காரணங்களால் தன்னை விட சிறிய நாடான உக்ரைன் மீது ரஷிய ராணுவம் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. பல்வேறு நகரங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.

3 நாள்களில் 2,000 கி.மீ பயணம்:

ரஷிய தாக்குதலில் இருந்து உயிர் பிழைப்பதற்காக  மஹுசிக் கிட்டத்தட்ட 3 நாள்களில் 2,000 கி.மீ தூரத்தைக் கடந்து சென்றுள்ளார். செர்பிய தலைநகர் பெல்கிரேடை சென்று அடைவதற்குகள் நூற்றுக்கு மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள், போக்குவரத்து வழிகள் குறித்த தகவல்கள், வெடிச்சத்தம், தீ, அபாய சங்கு என பல்வேறு நிகழ்வுகள் இருந்தன.

உக்ரைனில் இருந்து பங்கேற்ற தடகள அணியின் 6 பேரில் யாரோஸ்லேவா மஹுசிக்கும் ஒருவர். அவரது சக வீராங்கனையான ஐரியனா ஜெராùஸன்கோ தலைநகர் கீவில் இருந்து தனது கணவர், நாயுடன் தப்பி நாட்டை விட்டு வெளியேறினார். அவர் உயரம் தாண்டுதலில் 5-ஆம் இடத்தைப் பெற்றார்.

டிநிப்ரோ நகரைச் சேர்ந்த மஹுசிக், ஐரோப்பிய உள்ளரங்க சாம்பியன், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம், 2019 டோஹா உலகப் போட்டியில் வெள்ளிப் பதக்கங்களை வென்றவர்.

வெற்றி குறித்து மஹுசிக் கூறியது:

தங்கப் பதக்கம் எனக்கு, குடும்பத்துக்கு, நாட்டுக்கு மிகவும் முக்கியமானது. எனக்கு போட்டி குறித்த நினைப்பே இல்லை. மூன்று நாள்களாக காரில் பெல்கிரேட் வந்து சேர்ந்ததே பெரிய சவாலாக இருந்தது. மிகவும் மன உளைச்சலுடன் தான் போட்டியில் பங்கேற்றேன். எங்கள் ராணுவம் எங்களை பாதுகாக்க போராடுகிறது. உக்ரைன் மக்கள் பலமானவர்கள்.  பிப். 24-ஆம் தேதி வெடிச்சத்தங்களுடன் எனக்கு விடிந்தது. அங்கிருந்து தப்பிச் சென்றதே கடுமையாக இருந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com