ரோஸ் மில்க் சர்பத் 

சப்ஜா விதைகளை சுமார் 1 மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு பாதாம், பிஸ்தாவை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர், மிக்ஸி ஜாரில் முந்திரி, பால் பவுடர், சர்க்கரையைச் சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.
ரோஸ் மில்க் சர்பத் 

தேவையானவை:

பால் - 1 லிட்டர்
சப்ஜா விதைகள் - 3 மேஜைகரண்டி
வெள்ளரி விதை - 2 மேஜைகரண்டி
முந்திரி- 2 மேஜைகரண்டி
பாதாம்- 2 மேஜைகரண்டி
பிஸ்தா- 3 மேஜைகரண்டி
பால் பவுடர்- 1 மேஜைகரண்டி
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை
ரோஸ் சிரப்- தேவையான அளவு
சர்க்கரை- தேவையான அளவு

செய்முறை:

சப்ஜா விதைகளை சுமார் 1 மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு பாதாம், பிஸ்தாவை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர், மிக்ஸி ஜாரில் முந்திரி, பால் பவுடர், சர்க்கரையைச் சேர்த்து பொடித்துக் கொள்ளவும். பின்னர், அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையைப் பாகுக் காய்ச்சிக் கொள்ளவும். பின்னர், அடிகனமான பாத்திரத்தை மிதமான சூட்டில் வைத்து அதில் பால் மற்றும் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி காய்ச்சவும். (பாலில் ஆடை வராமல் இருப்பதற்கு அவ்வப்போது அதை கிளறி கொண்டே இருக்கவும்.) பால் நன்கு கொதித்து பொங்கி வரும்போது அடுப்பை முற்றிலுமாக குறைத்து விட்டு ஒரு கரண்டியின் மூலம் கிளறி கொண்டே கொதிக்க விடவும். 5 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் முந்திரி மாவை சிறிது சிறிதாகச் சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

மாவை முற்றிலுமாக சேர்த்த பின் அதை மீண்டும் கிளறி கொண்டே சுமார் 3 நிமிடம் வரை கொதிக்க விடவும்.

3 நிமிடத்திற்கு பிறகு அதில் பாதாம், பிஸ்தா, வெள்ளரி விதை, மற்றும் ஏலக்காய் தூளை சேர்த்து நன்கு கலந்து விட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை கொதிக்க விடவும். ஒரு நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு பாலை அடுப்பில் இருந்து கீழே இறக்கி அதை நன்கு ஆற விடவும். பால் நன்கு ஆறியவுடன் அதில் ஊற வைத்திருக்கும் சப்ஜா விதைகளைச் சேர்த்து கலந்து விடவும், அதனுடன் ரோஸ் சிரப்பை சேர்த்து நன்கு கலந்து பிரிட்ஜில் சுமார் 2 மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரம் வரை வைத்து பின்னர் பரிமாறவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com