வேப்பம் பூ பச்சடி

முதலில் மாங்காயை நன்கு கழுவி, தோல் நீக்கி, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
வேப்பம் பூ பச்சடி

தேவையானவை:

பச்சை மாங்காய் - 1 
வேப்பம் பூ - 1 கைப்பிடி
வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை - 1 கிண்ணம்
மிளகுத் தூள் -  கால் தேக்கரண்டி
உப்பு -  தேவைக்கேற்ப
தண்ணீர் - 1 டம்ளர்
புளி - எலுமிச்சை அளவு

செய்முறை:

முதலில் மாங்காயை நன்கு கழுவி, தோல் நீக்கி, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.  பின் புளியை ஒரு கிண்ணத்தில் போட்டு, அதில்  அரை டம்ளர் தண்ணீர்விட்டு  சிறிது நேரம் ஊற வைத்து, பின் அதை நன்கு பிசைந்து, சாற்றினை வடிகட்டிக் கொள்ள வேண்டும்.  பின்பு வடிகட்டிய புளி சாற்றில் மீதமுள்ள  அரை டம்ளர்  நீரை ஊற்றி, அதில் நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.  பிறகு அதில் மாங்காய் துண்டுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.  அதன் பின் வேப்பம்பூவைச் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி , இறுதியாக மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறினால்,  வேப்பம் பூ பச்சடி தயார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com