கேரட் சமோசா

மைதா, கார்ன்ஃப்ளார், ரவை மூன்றையும் சிறிது உப்பு சேர்த்து கெட்டியாக கலந்து வைத்துக் கொள்ளவும். கேரட், பட்டாணியை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் தண்ணீர் விடாமல் குக்கரினுள் வைத்து வேக வைக்கவும்.
கேரட் சமோசா

தேவையானவை:

பொடியாக நறுக்கிய கேரட்  - ஒரு கிண்ணம்
பச்சைப்பட்டாணி -  கால் கிண்ணம்
புதினா, மல்லித்தழை, பச்சைமிளகாய் - சிறிதளவு
ஆம்சூர் பொடி - கால் தேக்கரண்டி
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
பிரெட் துண்டுகள் - 2
கரம் மசாலாத்தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
மைதா - முக்கால் கிண்ணம்
கார்ன்ஃப்ளார் -கால் கிண்ணம்
ரவை -  ஒரு தேக்கரண்டி

செய்முறை: 

மைதா, கார்ன்ஃப்ளார், ரவை மூன்றையும் சிறிது உப்பு சேர்த்து கெட்டியாக கலந்து வைத்துக் கொள்ளவும். கேரட், பட்டாணியை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் தண்ணீர் விடாமல் குக்கரினுள் வைத்து வேக வைக்கவும். இதனுடன், கரம் மசாலாத்தூள், புதினா, மல்லித்தழை, பச்சைமிளகாய் விழுது, ஆம்சூர் பொடி, மஞ்சள்தூள், பிரெட் துண்டுகள் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். மைதா கலவையைப் பூரிக்கு இடுவதுபோன்று இட்டு, பாதியாக வெட்டி அதன் மேல் மசாலாவை வைத்து முக்கோண வடிவத்தில் மூடி, எண்ணெய்யில் பொரித்தெடுக்கவும். இதற்கு கொத்துமல்லி காரச் சட்னி சூப்பராக இருக்கும்.

எம்.சுகாரா, ராமநாதபுரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com