முடி உதிர்வதை தடுக்க என்ன வழி?

கோடைக் காலம் தொடங்கிவிட்டது. கோடை வெப்பத்தால் அதிகம் பாதிக்கப்படுவது தலைமுடிதான்.
முடி உதிர்வதை தடுக்க என்ன வழி?


கோடைக் காலம் தொடங்கிவிட்டது. கோடை வெப்பத்தால் அதிகம் பாதிக்கப்படுவது தலைமுடிதான். அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக எவ்வாறு சரும பராமரிப்பில் கவனம் செலுத்துகிறோமோ, அதேப்போல் தலை முடியையும் பராமரிக்க வேண்டும். இதனால் கூந்தல் உதிராமல் இருப்பதோடு, நீளமாகவும் வளரும். பொதுவாக கூந்தல் உதிர்வதற்கு முடித் துளைகளில் ஏற்படும் பிரச்னைகளே ஆகும். அத்தகைய முடித்துளைகளில் என்னென்ன பிரச்னைகள் வருகிறதென்றால், பொடுகு, அதிகப்படியான எண்ணெய், வறட்சியான ஸ்கால்ப் போன்றவையே. ஆகவே அதனை வீட்டிலேயே பராமரிக்க ஒரு சில வழிகளை மனதில் கொண்டு செயல்பட்டால், முடித்துளைகள் ஆரோக்கியமாக இருக்கும்.

தலைக்கு குளிக்கும் போது மிகவும் சூடான நீரில் குளிக்கக் கூடாது. ஏனெனில் அந்த வெப்பம் முடித் துளைகளில் பிடித்திருக்கும் முடிகளை வலுவிழக்கச் செய்யும். பின் முடி உதிர்தல் ஏற்படும், ஆகவே அந்த முடித்துளைகளை வலுவுடன் வைப்பதோடு, சுத்தமாகவும் வைக்க வெதுவெதுப்பான நீரில் கூந்தலை அலச வேண்டும். மேலும் குளித்தவுடன் கூந்தலை துவட்டும் போது, கவனமாக மென்மையாக துவட்ட வேண்டும். ஏனெனில் கூந்தல் ஈரமாக இருப்பதால் அந்த நேரத்தில் அதனை அழுத்தி துடைப்பதால், வலு இல்லாததால் உதிரும்.

நிறைய பேர் கூந்தலை மட்டும் நன்கு நீரில் அலசி, ஸ்கால்ப்பை சுத்தமாக நீரில் அலச மாட்டார்கள். சொல்லப்போனால், நீங்கள் பயன்படுத்தும் ஷாம்புக்கள் ஸ்கால்ப்பை முற்றிலும் சுத்தம் செய்யும் என்று சொல்ல முடியாது. என்ன தான் ஷாம்பு போட்டாலும், நீரில் அலசும் போது, விரல்களால் நன்கு தேய்த்து அலச
வேண்டும். அவ்வாறு குளித்தால் தலை சுத்தமாவதுடன்,
தலையில் பொடுகு, அரிப்பு போன்றவை ஏற்படாமல் இருக்கும்.

தினமும் தலையை சீவும் போதும், சீப்பின் பற்கள் தலையில் பட வேண்டும். அதிலும் சிலரது பிரச்னை என்னவென்றால், என்ன செய்தாலும் கூந்தல் நீளமாக வளருவதில்லை. இதற்கு பெரும் காரணம் முடியின் மயிர்கால்கள் செயலற்று இருப்பதே ஆகும். அதாவது போதிய அளவு கூந்தலுக்கு முறையான பராமரிப்பான சீவுதல் இல்லை. ஆகவே நீளமான கூந்தல் வேண்டுமென்றால் தினமும் கூந்தலை நன்கு நீண்ட நேரம் சீவுங்கள்.

இவ்வாறெல்லாம் தலையை சரியாக பராமரித்து வந்தால், கூந்தல் ஆரோக்கியமாக, நீளமாக வளருவதோடு, முடித்துளைகளும் ஆரோக்கியமாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com