காலிஃப்ளவர் கிராகெட்ஸ்

காலிஃப்ளவரை ஆய்ந்து சுத்தம் செய்து, 2 நிமிடம் கொதிநீரில் போட்டு எடுக்கவும்.
காலிஃப்ளவர் கிராகெட்ஸ்

தேவையானவை:

காலிஃபிளவர் - 1
உருளைக்கிழங்கு - 2
துருவிய சீஸ் - 3 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 4 பல்
இஞ்சி - 1 சிறு துண்டுùள
மைதா மாவு - 4 தேக்கரண்டி
பிரெட் தூள் - தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

காலிஃப்ளவரை ஆய்ந்து சுத்தம் செய்து, 2 நிமிடம் கொதிநீரில் போட்டு எடுக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி நன்கு மசித்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சியை அரைத்துக் கொள்ளவும். பின்னர், காலிஃபிளவர், மசித்த உருளை, அரைத்த விழுது, 2 தேக்கரண்டி மைதா, தேவையான உப்பு சேர்த்து நன்கு பிசைந்து விரும்பிய வடிவம் செய்யவும். இதுதான் காலிஃபிளவர் கிராகெட்ஸ், மீதமுள்ள 2 தேக்கரண்டி மைதாவை சற்று நீர்க்க கரைத்து, அதில் காலிஃபிளவர் கிராகெட்ûஸ முக்கி பிரெட் தூளில் புரட்டி சூடான எண்ணெய்யில் பொரித்தெடுக்கவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com