கவுனி அரிசி லட்டு

கவுனி அரிசியை நன்கு சுத்தம் செய்து, மாவாக நன்கு அரைத்துக் கொள்ளவும். பின்னர், அதனை வெறும் வாணலியில் சிறிது தீயில் வைத்து வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.
கவுனி அரிசி லட்டு

தேவையானவை:

கவுனி அரிசி - ஒரு கிண்ணம் துருவிய முந்திரி, பாதாம், நிலக்
கடலை- கால் கிண்ணம்
நெய் - தேவையான அளவு
நாட்டு சர்க்கரை- முக்கால் கிண்ணம்

செய்முறை: 

கவுனி அரிசியை நன்கு சுத்தம் செய்து, மாவாக நன்கு அரைத்துக் கொள்ளவும். பின்னர், அதனை வெறும் வாணலியில் சிறிது தீயில் வைத்து வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர், துருவிய முந்திரி, பாதாம், நிலக்கடலை கலவையை லேசாக வாசனை வரும்வரை வறுக்கவும். இந்தக் கலவைகள் சூடாக இருக்கும்போதே பொடித்த நாட்டு சக்கரையை கலந்து நெய்யை உருக்கி ஊற்றி சுடச் சுட சிறு உருண்டைகளாகப் பிடித்து, எடுக்க வேண்டும். சுவையான லட்டு தயார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com