மைசூர்  உளுந்தம் பொடி சாதம்! 

முந்திரிப் பருப்பை சிறிய துண்டுகள் செய்யவும். வாணலியில் சிறிது நெய்விட்டு நிதானமாய் எரியக்கூடிய அடுப்பில் வைத்து முந்திரிப் பருப்பை வறுத்தெடுத்துக் கொண்டு உளுந்தம் பருப்பை வாசனை வரும் பக்குவத்தில்
மைசூர்  உளுந்தம் பொடி சாதம்! 

தேவையானவை:

அரிசி - 100 கிராம்
உளுந்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
முந்திரி பருப்பு - 8
கொப்பரைத் துருவல் - 4 தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
பெருங்காயம் - திட்டமாய்
நெய் - 2 தேக்கரண்டி
சர்க்கரை - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
அப்பளம் - 2
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு
உப்பு - தேவையான அளவு


செய்முறை:

முந்திரிப் பருப்பை சிறிய துண்டுகள் செய்யவும். வாணலியில் சிறிது நெய்விட்டு நிதானமாய் எரியக்கூடிய அடுப்பில் வைத்து முந்திரிப் பருப்பை வறுத்தெடுத்துக் கொண்டு உளுந்தம் பருப்பை வாசனை வரும் பக்குவத்தில் பொன்னிறமாய் வறுத்துக் கொள்ளவும். அரிசியைக் குழையாமல் பக்குவமாய்ச் சாதம் செய்து கொள்ளவும். உளுந்தம் பருப்பைச் சன்ன ரவை போன்று பொடி செய்யவும். சாதத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு, முந்திரிப் பருப்பு, கொப்பரைத் துருவல், உளுந்தம் பொடி, உப்பு, சர்க்கரை, கறிவேப்பிலை, நெய் முதலியவற்றைச் சேர்த்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் திட்டமாக எண்ணெய் விட்டு காய்ந்தபின் இரண்டு அப்பளத்தைப் பொரித்துக் கொண்டு, கடுகு, பெருங்காயம், காய்ந்தமிளகாய் கிள்ளிப்போட்டு தாளிக்கவும். அப்பளத்தை நொறுக்கிச் சாதத்தில் சேர்த்து பெருங்காயத்தைப் பொடித்துப் போட்டுத் தாளித்ததையும் சேர்த்து சாதத்தை நன்றாகக் கலந்து உபயோகப்படுத்தவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com