28 வயது சன்யோகிதா 7 வயது அப்ரா கடப்ரா

தன்னுடைய பதிமூன்றாவது வயதில் புணேவில் நடந்த கோடைக்கால ஈக்யூஸ்ட்ரியன் என்கிற குதிரை சவாரி விளையாட்டு பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக தான் பயிற்சி பெறும் மார்வாரி குதிரைகளுடன் சென்றிருந்த
28 வயது சன்யோகிதா 7 வயது அப்ரா கடப்ரா


தன்னுடைய பதிமூன்றாவது வயதில் புணேவில் நடந்த கோடைக்கால ஈக்யூஸ்ட்ரியன் என்கிற குதிரை சவாரி விளையாட்டு பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக தான் பயிற்சி பெறும் மார்வாரி குதிரைகளுடன் சென்றிருந்த சன்யோகிதா கடா, அங்கு போட்டியில் பங்கேற்ற இளம் வீராங்கனைகளை பார்த்தார். உடனே தானும் குதிரை சவாரி விளையாட்டில் தீவிரமாக பயிற்சி பெற வேண்டுமென்று தீர்மானித்தார். அதிர்ஷ்ட வசமாக 2006 ஆம் ஆண்டு முதல் ரைடிவ் அகாதெமியை நடத்தி வரும் ஈக்யூஸ்ட்ரியன் பயிற்சியாளர் கர்னல் குலாம் முகமதுகான் என்பவரை சந்தித்தார். அவரிடம் முறையாக பயிற்சிப்பெறத் தொடங்கினார். சன்யோகிதாவின் முயற்சியும் பயிற்சியும் வீண் போகவில்லை.

கடந்த ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி மும்பையில் நடந்த இன்டர்நேஷனல் ஃபெடரேஷன் பார் ஈக்யூஸ்ட்ரியன் ஸ்போர்ட்ஸில், கலந்து கொண்ட சன்யோகிதா, பி பிரிவில் முதல் இடங்களை பிடித்துள்ளார். தொடர்ந்து 2021 ஆம் ஆண்டில் அனைத்து பிரிவினருக்கும் நடந்த ஈக்யூஸ்ட்ரியன் பிரிமியர் லீக் போட்டியில் சிறந்த குதிரை சவாரி வீராங்கனை என்ற சிறப்பைப் பெற்றதோடு, அனைத்திந்திய அளவில் டிரஸ்úஸஜ் சீனியர் 1 என்கிற நான்கு இடங்களையும் பிடித்துள்ளார். கூடவே மும்பையில் நடந்த அமெச்சூர் ரைடர்ஸ் கிளப்பில் பங்கேற்பதற்காக 15 ஜூனியர் நேஷனல் வீராங்கனைகளுக்கு பயிற்சியும் அளித்துள்ளார்.

ஆரம்ப காலங்களில் கல்லூரி படிப்பையும் கவனித்துக் கொண்டு கூடவே ஈக்ஸ்யூட்ரியன் பயிற்சி பெறுவது சன்யோகிதாவுக்கு சிரமமாக இருந்ததாம். பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது வகுப்பு முடிந்ததும் இவரது தந்தை இவரை பயிற்சி பெற அழைத்துச் செல்வாராம்.

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் எழுத இருநாள்கள் இருந்தபோது கூட ஈக்ஸ்யூட்ரியன் போட்டியில் பங்கேற்க சென்றதுண்டு, 15 ஆண்டுகளுக்கு முன் பயிற்சி பெற துவங்கியிருந்தாலும் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புகள் கிடைத்ததில்லை. ஏனெனில் 2000 ஆம் ஆண்டுகளின் மத்தியில் ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று போட்டிகள் தான் நடக்கும் என்று கூறும் சன்யோகிதாவுக்கு தற்போது 28 வயதாகிறது.

கடந்த இரண்டாண்டுகளாக போட்டியில் கலந்து கொள்ள ஏழு வயதான அப்ரா கடப்ரா என்கிற பெல்ஜியன் குதிரையை பயன்படுத்தி வருகிறாராம்.

ஒரே குதிரையில் பயிற்சிப் பெறுவது போட்டிகளில் வெற்றிப் பெற உதவும் என்று கூறும் சன்யோகிதாவின் கணவர் ஆஷிஷ் லிமாயி, புணேயில் கர்னல் குலாம் முகமது கான் பயிற்சி கூடத்தில் குதிரை சவாரியில் பயிற்சிப் பெற்றவர் என்பதால் அவரே தற்போது சன்யோகிதாவுக்கு பயிற்சியளித்து வருகிறார்.

நாங்களிருவரும் ஒன்றாக பயிற்சியில் ஈடுபடும்போது கணவன் மனைவி என்பதையே மறந்துவிடுவோம். அவர் அளிக்கும் பயிற்சி கடுமையாக இருக்கும் தற்போது அவர் ஜெர்மனியில் பயிற்சி அளிக்கச் சென்றுள்ளார். இங்கு பயிற்சியில் எனக்கு ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் வீடியோ எடுத்து அவருக்கு அனுப்பி என்னுடைய தவறை திருத்திக்கொள்வேன். அப்ராவுடன் தினமும் 30 முதல் 40 நிமிடங்கள் பயிற்சிப் பெறுகிறேன். கூடவே மேலும் ஜந்தாறு குதிரைகளுக்கும் பயிற்சியளித்து வருகிறேன்.

ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் ஒலிம்பிக்ஸில் இந்தியா சார்பில் பங்கேற்க வேண்டுமென்பது என்னுடைய குறிக்கோள் ஆகும். அதற்குள் இடையில் நடைபெறும் போட்டிகளிலும் பங்கேற்க நான் வெற்றிக்காக எடுத்து வைக்கும் காலடிகளாகவும், நல்ல அனுபவமாகவும் இருக்கும்'' என்கிறார் சன்யோகிதா கடா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com