அடை பிரதமன் - (கேரளா)
By எம். எஸ். லட்சுமி வாணி | Published On : 09th February 2022 06:00 AM | Last Updated : 09th February 2022 06:00 AM | அ+அ அ- |

தேவையானவை:
அரிசி அரை டம்ளர்
தேங்காய்ப்பால் 4 டம்ளர்
வெல்லம் 2 டம்ளர்
ஏலக்காய் 6
பால் 1 டம்ளர்
செய்முறை:
அரிசியை ஊற வைத்து மையாக, கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவை, வாழை இலையில் நெய் தடவி, மெலிதாக பரப்பி வேக வைத்துக் கொள்ளவும். பாதி வெந்தபின் மிகவும் சிறு சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும். நெய்யில் முந்திரியை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். அதனுடன் அரிசி அடைத்துண்டுகளை பிரட்டி பாலைச் சேர்க்கவும். வெல்லத்தை பொடி செய்து போடவும். நன்கு வெந்த அடைத் துண்டுகளில் தேங்காய்ப்பாலைச் சேர்த்து, ஏலக்காயை பொடி செய்து போட்டு இறக்கவும். அடை பிரதமன் தயார்.