பதிர்பேணி - (தமிழ்நாடு)
By எம். எஸ். லட்சுமி வாணி | Published On : 09th February 2022 06:00 AM | Last Updated : 09th February 2022 06:00 AM | அ+அ அ- |

தேவையானவை:
மைதா 2 கிண்ணம்
அரிசிமாவு கால் கிண்ணம்
வெண்ணெய் கால் கிண்ணம்
பொடித்த சர்க்கரை கால் கிண்ணம்
ஏலக்காய்த்தூள் கால் தேக்கரண்டி
பால் அரை லிட்டர்
பொடித்த பாதாம் கால் கிண்ணம்
குங்குமப்பூ சிறிதளவு
எண்ணெய் தேவையான அளவு
சமையல் சோடா, உப்பு 1 சிட்டிகை
செய்முறை:
மைதாவுடன் உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்தில் பிசைந்து, 2 மணி நேரத்துக்கு மூடி வைக்கவும். சமையல் சோடாவுடன் வெண்ணெய்யைச் சேர்த்து ஒரு தட்டில் போட்டு, கையால் அழுத்தி தேய்க்கவும். ( குறைந்தது 5 நிமிடங்கள் தேய்க்க வேண்டும்) இதனுடன் அரிசி மாவு சேர்த்து கலக்கவும். இதுதான் பதிர்.
வாணலியில் எண்ணெய்யை ஊற்றி அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும். பிசைந்த மைதாவை அப்பளம் போல திரட்டவும். ஒரு தேக்கரண்டி பதிர் எடுத்து, அப்பளத்தின் மேல் பரவலாக பூசவும். இதன்மேல் மற்றொரு அப்பளம், சிறிதளவு பதிர், இன்னொரு அப்பளம் வைக்கவும். இதை இறுக்கி சுருட்டவும். பிறகு சம அளவு துண்டுகள் போடவும். அவற்றை மீண்டும் ஒருமுறை அப்பளமாக திரட்டி, சூடான எண்ணெய்யில் போட்டு, மொறு மொறுவென பொரித்து எடுக்கவும். இதை தட்டில் நிமிர்த்தி வைத்தால், அதிகப்படியான எண்ணெய் வடிந்துவிடும். ஏலக்காய்த்தூளுடன், கொஞ்சம் சர்க்கரைத்தூள் கலந்து பொரித்த அப்பளத்தின் மேல் தூவிவிடவும். பாலை கொதிக்கவைத்து குறுக்கி, பொடித்த பாதாம், மீதமுள்ள சர்க்கரை, குங்குமப்பூ கலந்து அப்பளத்தின் மேல் ஊற்றிப் பரிமாறவும்.