ஸ்வீட்  கச்சோரி

ஸ்வீட்  கச்சோரி

மைதாமாவு,  ரவை  இவைகளை  சிறிதளவு  எண்ணெய்விட்டு  கெட்டியாகப்  பிசைந்து  கொள்ளவும்.

தேவையானவை:

சர்க்கரை வள்ளிக் கிழங்கு - 2
தனியாத்தூள் - 1 தேக்கரண்டி
ரவை - அரை கிண்ணம்
மைதா - கால் கிண்ணம்
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:

மைதாமாவு, ரவை இவைகளை சிறிதளவு எண்ணெய்விட்டு கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். வேக வைத்து மசித்த சர்க்கரை வள்ளிக்கிழங்குடன் தனியாத் தூள், எள்ளுத்தூள், மிளகாய்த் தூள், உப்பு, கரம் மசாலா முதலியவைகளைச் சேர்த்து நன்கு கலந்து சிறு உருண்டைகளாக்கிக் கொள்ளவும். பிசைந்த மாவிலிருந்து சின்ன சின்ன உருண்டையாக எடுத்து குழிப்போன்று செய்து அதன் உள்ளே சர்க்கரை வள்ளிக் கிழங்கு மசாலா கலவையை வைத்து மூடி, சிறிய பூரியாக செய்யவும். இவற்றை சூடான எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com