உலர் பழங்களைப் பாதுகாக்க.. !

உலர்ப் பழங்களைப் பராமரிக்க அதை வைத்திருக்கும் பாத்திரத்தில் 2-3 கிராம்புகளை போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு ருசி கெடாமல் இருக்கும்.
உலர் பழங்களைப் பாதுகாக்க.. !


உலர்ப் பழங்களைப் பராமரிக்க அதை வைத்திருக்கும் பாத்திரத்தில் 2-3 கிராம்புகளை போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு ருசி கெடாமல் இருக்கும்.

வெங்காயத்தையும், தக்காளியையும் சம அளவு எடுத்துப் பொடியாக நறுக்கவும். தேவையான உப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்து ஜாடியில் போட்டு நன்கு குலுக்கி மூடவும், ஓரிரு நாள் ஊறிய பிறகு தயிர் சாதத்திற்குத் தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

காலை உணவாக பழைய சாதத்தை உண்டால் உடல் லேசாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும். இரவிலே தண்ணீர் ஊற்றி வைப்பதால் லட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் உருவாகிறது. மறுநாள் இதை குடிப்பதால் உடல் சூட்டை தனிப்பதோடு குடல் புண், வயிற்று வலி போன்றவற்றை குணப்படுத்தும். இதில் தான் வைட்டமின் பி6 மற்றும் பி12 அதிகமாக உள்ளது.

தினமும் உணவில் வேர்க்கடலை எண்ணெய்யைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் அதில் உள்ள நல்ல கொழுப்பால், உடல் எடை அதிகரிக்கும்.

கோடை காலத்தில் மதிய உணவில் வெஜிடபிள் சாலட் அவசியம் சேர்க்க வேண்டும். அதிக எண்ணெயில் பொரித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக இருக்கும்.

கொழுக்கட்டைக்கு மாவு பிசையும் போது ஒரு கரண்டி பால் சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை அவித்தால் விரிந்து போகாமல் இருக்கும்.

ரவா, மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப்போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.

புளித்தண்ணீரில் காய் வேக நேரமெடுக்கும் என்பதால் அதிகமாகக் காய்கள் போட்டு சாம்பார் செய்யும் போது உப்பு, மஞ்சள் பொடியிட்டு காய்கள் வெந்த பிறகு புளித்தண்ணீரை விடலாம்.

ஊறுகாய் போட்ட உடனே சாப்பிட வேண்டுமெனில் நல்லெண்ணெய் ஒரு தேக்கரண்டி ஊற்றிக்கொண்டு மஞ்சள், இஞ்சி, மாங்காய் இஞ்சி, பச்சை மிளகாயைக் கொஞ்சம் வதக்கிக் கொண்டால் சுவையாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com