சமையல் குறிப்புகள்!

காபி பொடியைப் போடுவதற்கு முன் பில்டரின் அடிப்பாகத்தை தீயில் காட்டி விட்டு பின்பு உபயோகிக்கவும்.
சமையல் குறிப்புகள்!

காபி பொடியைப் போடுவதற்கு முன் பில்டரின் அடிப்பாகத்தை தீயில் காட்டி விட்டு பின்பு உபயோகிக்கவும்.

கோதுமை மாவை நன்கு சலித்து சிறிதளவு டேபிள் சால்டை கலந்து வைத்தால் வண்டுகள் வராது.

சப்பாத்தி எப்போதும் சூடாக இருக்க, அதை சில்வர் பேப்பரில் சுற்றி வைக்கவும்.

கோதுமையை நன்கு கழுவி நான்கு மணி நேரம் ஊற வைத்து உலர்த்தி பின் மிஷினில் அரைத்து சப்பாத்தி செய்தால் மிகவும் மிருதுவான சப்பாத்தி கிடைக்கும்.

சமையலில் உப்பு சற்று கூடுதலா? கவலை வேண்டாம். பால், க்ரீம், தயிர் இவற்றில் ஏதோ ஒன்றினைச் சேருங்கள். சரியாகிவிடும்.

வாழைப்பூ, வாழைத்தண்டு, பிரண்டை  ஆகியவற்றை நறுக்கும் போது கையில் எண்ணெய் தடவினால் கரை படாது.

பாலேடு, தயிரேடுகளை பாட்டிலில் போட்டு குலுக்க வெண்ணெய், மோர் ஒரே 
சமயத்தில் கிடைக்கும்.

கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழையை வாங்கிய உடன் துணி பையில் சுற்றி ஃப்ரிஜில்  வைக்க வாடாமல் இருக்கும்.

இட்லிக்கு மாவு அரைக்க அரிசியை ஊறப் போட மறந்து விட்டீர்களா? சுடு தண்ணீரிலே அரிசியை ஊறப் போடுங்கள். பத்து நிமிடத்தில் ஊறிவிடும்.

காய்ந்து போன கறிவேப்பிலைகளை சேகரித்து வைத்தால் குழம்பு மிளகாய் தூள் அரைக்கும் பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் ரசப் பொடி, இட்லி பொடி அரைக்கும் போதும்  பயன்படுத்தலாம். மேலும் இட்லி அவிக்கும் பொழுது இட்லி பானைக்கு அடியில் தண்ணீர் ஊற்றி வைக்கும் பொழுது கொஞ்சம் சேர்த்தால் இட்லி நல்ல மணமாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com