சின்னத்திரை மின்னல்கள்!

தமிழ்த்திரையுலகில்  பின்னணி பாடகியாக   அறிமுகமானவர் ஸ்ரீலேகா பார்த்தசாரதி.  "கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?', "கொக்கு மீன திங்குமா?', "திம்சு கட்ட...' போன்ற  பாடல்கள் இவரது  ஹிட் லிஸ்ட்.
சின்னத்திரை மின்னல்கள்!

நல்வாய்ப்பு!

தமிழ்த்திரையுலகில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் ஸ்ரீலேகா பார்த்தசாரதி. "கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?', "கொக்கு மீன திங்குமா?', "திம்சு கட்ட...' போன்ற பாடல்கள் இவரது ஹிட் லிஸ்ட். இவர், தற்போது சின்னத்திரை நடிகையாகியுள்ளார். ஜீ தமிழ் சேனலில் புதிதாக ஒளிபரப்பாகும் "ரஜினி' தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், ""என் மகன் பிறந்ததும், சினிமாவிலிருந்து ஒரு பிரேக் எடுத்தேன். ஆறு வருஷத்துக்குப் பிறகு, தற்போது, மறுபடியும் மீடியா வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. இந்நிலையில் தான், "ரஜினி' தொடரில் அம்மா கேரக்டரில் நடிக்க கேட்டாங்க, அம்மா கேரக்டர் என்பதால், நடிக்கலாமா, வேண்டாமா என்று தயக்கம் இருந்தது. வீட்டில் ஆலோசித்துவிட்டு ஒத்துக்கிட்டேன்.

நான் 14 வயதில் விளம்பர படங்களுக்கு பாடத் தொடங்கினேன். பின்னர், படிப்படியாக வளர்ந்து சினிமாவில் பாடகியானேன்.

சினிமா, சின்னத்திரை என்று மீடியா தற்போது ரொம்பவே மாறிவிட்டது. அதனால், மீடியாவில் ஏதாவது ஒரு துறையை மட்டுமே நம்பியிருக்காமல், கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால்தான் தொடர்ந்து இங்கு நிலைத்திருக்க முடியும் என புரிந்து கொண்டேன்.

அப்பதான், சன் தொலைக்காட்சியில் "ராஜபார்வை' ஷோவில் வழிகாட்டியாக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்த ஷோ முடியும் தருவாயில்தான் "ரஜினி' தொடரின் வாய்ப்பு வந்தது.

"நாம நடிக்கிற கேரக்டர் மக்கள் மனதில் இடம் பிடிக்கிறதுதான் முக்கியம். உனக்கு இந்த தொடர் அப்படியோர் அடையாளத்தைக் கொடுக்கும்' என்று கணவர் கூறினார். ஆனாலும், என்னால முடிவெடுக்க முடியாத நிலையில் என் மகன்ஆருஷிடம் ஆலோசித்தேன். நான் நடிக்கிறது வயதான அம்மா ரோல். இதனால், பலரும் என்னை பாட்டினுகூட கூப்பிட வாய்ப்பு இருக்கு. அதை நீ ஏத்துப்பியா... நான் நடிக்கட்டுமா?' என்று கேட்டேன். கொஞ்ச நேரம் யோசிச்சுட்டு, எனக்கு எந்த வருத்தமும் இல்லம்மா நீ நடி என்றான். பின்னர்தான்
ஒத்துக்கிட்டேன்.

இப்போது, சீரியல் ஒளிபரப்பாகத் தொடங்கிவிட்டது. பாசிட்டிவ்வான வரவேற்புகள் கிடைத்து வருகிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com