சிறுநீரக கல்:  கண்டறியும் மென் பொருள்!

உடலில் நீர் சத்து குறையும் போது, அதாவது தண்ணீர் போதிய அளவு அருந்தாமல் இருபவர்களுக்கு சிறுநீரக கல் உண்டாகிறது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். நாம் இதனை கல் அடைப்பு எனக் கூறு கிறோம்.
சிறுநீரக கல்:  கண்டறியும் மென் பொருள்!

உடலில் நீர் சத்து குறையும் போது, அதாவது தண்ணீர் போதிய அளவு அருந்தாமல் இருபவர்களுக்கு சிறுநீரக கல் உண்டாகிறது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். நாம் இதனை கல் அடைப்பு எனக் கூறு கிறோம்.
இந்த சிறுநீரக கல் எந்த அளவில் உள்ளது. என்பது குறித்து தற்போது மருத்துவர்கள் எக்ஸ்ரே, ஸ்கேன், சி.டி.ஸ்கேன் ஆகியவற்றின் முலம் தெரிந்து கொண்டு, அதற்கு தகுந்தாற்போல சிகிச்சை அளிக்கிறார்கள். இந்த கல் அடைப்பினால் ஏற்படும் வலியை பொறுத்துக்கொண்டு ஸ்கேன் உள்ளிட்டவை எடுத்துப்பார்த்து அதன் பின்னர் சிகிச்சை அளிக்க காலதாமதமாகும்.
இந்நிலையில்  சிறுநீரக கல்லின் தன்மை, அளவு உள்ளிட்டவை குறித்து துல்லியமாக கண்டறியும்   மென் பொருளை கல்லூரி மாணவி ஒருவர் கண்டுபிடித்து அதற்கு தேசிய அளவில் மூன்றாம் பரிசு வாங்கியுள்ளார். அதே கல்லூரி மாணவி ஒருவர் கெட்டுப்போன உணவினை கண்டறியும் மென்பொருளையும் கண்டுபிடித்து தேசிய அளவில் இரண்டாம் பரிசு பெற்றுள்ளார். 
இந்த இரு மாணவிகளும் விருதுநகர் மாவட்டம் சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரி மாணவிகள். 
இது குறித்து அக்கல்லூரி தாளாளர் ஆர்.சோலைச்சாமி நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:
""எங்கள் கல்லூரியில் மின்னியல் மற்றும் தொடர்பியல்துறை மூன்றாம் ஆண்டு மாணவி எம்.முனீஸ்வரி சிறுநீரக கல் கண்டறியும் மென்பொருளை கண்டுபிடித்து தேசிய அளவில் மூன்றாமிடமும், அதே துறையைச் சார்ந்த மூன்றாம் ஆண்டு மாணவி எஸ்.நந்தினி தேவி , கெட்டுப்போன உணவுகளை கண்டறியும் மென்பொருளையும் கண்டு பிடித்து தேசிய அளவில் இரண்டாமிடம் பெற்றுள்ளனர். 
இந்திய அரசின் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் கன்னியாகுமரி கிளை 150-ஆவது ஆண்டு விழாவினையொட்டி, தேசிய அளவிலான பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியை நடத்தியது. 
மாணவர்களின் திறமையை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இப்போட்டி நடைபெற்றது. இதில் முதல் இரண்டு சுற்றுபோட்டிகள் இணையவழியாக நடத்தப்பட்டது. 2021 மே மாதம் இப்போட்டியில் கலந்து கொள்ள எங்கள் கல்லூரி மாணவர்கள் 12 பேரின் பெயர்களை பதிவு செய்தோம். 
இதில் முதல் சுற்று இணையம் வழியே 2021 அக்டோபர் மாதம் 3 - ஆம் தேதி நடந்தது. இரண்டாம் சுற்று இணையம் வழியே 2021அக்டோபர் 23- ஆம் தேதி நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவிகள் எஸ்.நந்தினிதேவி மற்றும் எம். முனீஸ்வரி ஆகியோர் வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். இறுதி சுற்று 2021 டிசம்பர் 18 -ஆம் தேதி  கன்னியாகுமரியில் நடைபெற்றது. இதில் எங்கள் மாணவி நந்தினிதேவி கெட்டுப்போன உணவுகளை கண்டறியும் மென்பொருள் கண்டுபிடித்து தேசிய அளவில் இரண்டாமிடமும், நந்தினி தேவி சிறுநீரக கல் கண்டறியும் மென்பொருள் கண்டுபிடித்து தேசிய அளவில் மூன்றாமிடமும் பெற்றனர்.
கெட்டுப்போன உணவுப் பொருள்களை கண்டறியும் மென்பொருள் என்பது 3 சென்சார்கள் பொருத்தப்பட்டு, மைக்ரோ கண்ட்ரோல் போர்டு , மென்பொருள் கோடிங் அமைத்துள்ளோம். உணவுப்பொருள் உள்ளடங்கிய டப்பா உள்ளிட்டவைகளை சென்சார் முன்பு வைத்தால், அதில் உள்ள ஈரப்பதம், வெப்பநிலை, உலர்நிலை, உள்ளிட்டவைகள் உள்வாங்கிகொண்டு, பொருள்கள் கெட்டுப்போயிருந்தால், ஒலிசத்தம் மற்றும் சிகப்பு விளக்கு எரியும். பொருள் கெட்டுப்போகாமல் இருந்தால் பச்சை விளக்கு எரியும். இதன் மூலம் பிளாஸ்டிக் டப்பா, கண்ணாடி பாட்டில் உள்ளிட்டவைகளில் அடைக்கப்பட்டிருக்கும் உணவுப்பொருள்களின் தன்மையை கண்டறிய முடியும்.
சிறுநீரக கல் கண்டறியும் மென்பொருள்: சில பொருள்களினால் சிறுநீர் அடர் கரைசலாகும் போது சிறுநீரக கல் மனித உடலில் ஏற்படுகிறது. இதில் மேத்லேப் மென்பொருள் மூலம், அல்ட்ரா சவுண்ட்(குறைந்த ஒலி அளவு) இணைக்கப்பட்டுள்ளது. மனித உடலில் நுண்கதிர்களை பாய்ச்சினால் கிடைக்கும் முடிவுகள் கோடிங்கில் போட்டு, அதிலிருந்து கிடைக்கும் முடிவுகள் இமேஜூக்கு சென்றுவிட்டால் மிகச்சிறிய சிறுநீரக கல்கூட அடையாளம் தெரிய இயலும். 
சிறுநீரக கல்லை கண்டறிய ஸ்கேன் உள்ளிட்டவை எடுத்துக் கொண்டால் செலவு அதிகமாகும். காலதாமதமும் ஆகும். ஆனால் இந்த மென்பொருள் மூலம் விரைவாகவும், குறைந்த செலவிலும் கல்லை கண்டறியலாம். இந்த மாணவிகளுக்கு துறைத்தலைவர் கே.வளர்மதி , வழிகாட்டியாக பேராசிரியர் வெ.கருப்பசாமி ஆகியோர் செயல்பட்டனர்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com