சமையல் குறிப்புகள்

இடியாப்பத்துக்கு மாவு பிசையும்போது சிறிதளவு வெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து கொண்டால்,  சுலபமாகப் பிழியும்.
சமையல் குறிப்புகள்

இடியாப்பத்துக்கு மாவு பிசையும்போது சிறிதளவு வெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து கொண்டால்,  சுலபமாகப் பிழியும்.

எந்தக் கீரை  வகைகளைச் சமைத்தாலும் தேங்காய் எண்ணெய் கொண்டு தாளித்தால், மணமும், ருசியும் அபாரமாக இருக்கும்.

சேமியா அல்லது ஜவ்வரிசிப் பாயாசம் செய்யும்போது, பால் முதலில் சேர்த்தப் பின்னர் சூடு ஆறினதும் சர்க்கரையைச் சேர்த்தால் பாயாசம் நீர்த்துப் போகாமல் இருக்கும்.

தேங்காய் பர்ஃபி செய்யும்போது ஏலக்காய்த் துணுக்குக்குப் பதிலாக சிறிது வெனிலா எùஸன்ஸ் சேர்த்தால் நன்றாக இருக்கும்.

தேயிலைச் சாறுடன் சர்க்கரை சேர்த்துக் கொதிக்க வைத்தால், தேநீர் தயாரிக்கும்போது பாத்திரத்தில் கறை படியாது.

வடுமாங்காய் வாங்கும்போது, காம்புடன் கூடிய மாங்காயாக வாங்கினால் நீண்ட நாள்கள் கெடாமல் இருக்கும்.

பருப்பு  உசிலி செய்யும்போது எண்ணெயை மீதப்படுத்தவும் அதே சமயம் உதிரி உதிரியாகவும் இருக்க ஓர் அருமையான வழி:

ஊற வைத்த கடலைப் பருப்பை மிளகாய், உப்பு,  பெருங்காயத்துடன் தண்ணீர் விடாமல் ஒன்றிரண்டாக அரைத்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். பின்னர், அதை ஆறவைத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து உசிலியில் சேர்த்தால் உதிரி உதிரியாக நீங்கள் விரும்பும் உசிலி தயார்.

மிக்ஸியின் ஜாடியில் என்ன உள்ள பிளேடைக் கழற்ற முடியாதபோது அது மூழ்கும் அளவுக்கு வெந்நீர்/ ஊற்றி சிறிது நேரம் கழித்து வெந்நீரை ஊற்றி விட்டுக் கழற்றினால் எளிதில் கழற்றி விடலாம்.

கிழங்கு வகைகளை சீக்கிரம் வேக வேக்க வேண்டுமானால் பத்து நிமிடங்கள் உப்பு கலந்து நீரில் ஊறவைத்து, பிறகு வேக வையுங்கள். எளிதில் வெந்துவிடும்.

முட்டைக் கோûஸத் துருவி நன்றாக வதக்கி மிளகாய், புளி, சேர்த்து அரைத்தால் சுவையான கோஸ் துவையல் ரெடி.

உருளைக் கிழங்கை போண்டா செய்வது போல, எல்லா காய்கறிகளையும் நன்றாக வதக்கி, உருட்டி, கடலைமாவில் தேய்த்து பொரித்து எடுத்தால் சுவையான வெஜிடபிள் போண்டா ரெடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com