மசாலா பணியாரம்
By அ.ப.ஜெயபால் | Published On : 17th July 2022 06:00 AM | Last Updated : 17th July 2022 06:00 AM | அ+அ அ- |

தேவையான பொருள்கள்:
பச்சரிசி- 2 கிண்ணம்
உளுத்தம் பருப்பு- ஒன்றரை கிண்ணம்
தேங்காய்த் துருவல்- கால் கிண்ணம்
கடுகு- அரை தேக்கரண்டி
உளுந்து- 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம்- கால் கிண்ணம்
பச்சை மிளகாய்-4
நறுக்கிய கறிவேப்பிலை- 2 கொத்து
கடலை எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
பச்சரிசி, உளுந்து ஆகிய இரண்டையும் சேர்த்து, ஒரு மணி நேரம் ஊறவைத்து கெட்டியாக அரைத்து உப்பு போட்டு கலந்து கொள்ளவும். கடாயில் 2 தேக்கரண்டி ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலையை தனித்து வெங்காயம், பச்சை மிளகாய் வதக்கி, தேங்காய்த் துருவல் வதக்கி இறக்கவும். ஆறியதும் மாவில் கொட்டி கலந்து கைகளால் மாவை சிறு உருண்டைகளாக எடுத்து, சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். மல்லி சட்னி, தேங்காய் சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.