அகத்திக் கீரையின் மகத்துவம்
By முக்கிமலை நஞ்சன் | Published On : 31st July 2022 06:00 AM | Last Updated : 01st August 2022 06:03 PM | அ+அ அ- |

உடற்சூட்டைத் தணிப்பதில் தனிச்சிறப்பு அகத்திக் கீரைக்கு உண்டு.
கர்ப்பிணிகள் சாப்பிட்டால், தாய்ப் பால் நன்கு சுரக்கும். மூளை தொடர்புடைய நோய்களைக் குணமாக்கும்.
காலை, மாலை இரண்டு கிராம் பொடியை சாப்பிட்டு இளஞ்சூடான நீர் பருகி வர, மூன்று நாள்களில் மார்பு வலி குணமாகும்.
அகத்தீக் கீரை தைலத்தில் குளியல் செய்து வர பித்தம் தணிந்து மயக்கம், எரிச்சல், புகைச்சல் குணமாகும்.
அகத்திக் கீரையை தேங்காய், மிளகு சேர்த்து சமைத்து தொடர்ந்து மூன்று நாள்கள் சாப்பிட வாய்ப்புண் குணமாகும்.
கீரையை அரைத்து சூடு பண்ணி பற்றுப் போட அடிபட்ட வீக்கங்களுக்கு குணம் தெரியும்.
அகத்திக் கீரை சாற்றை நெற்றியில் தடவி ஆவி பிடிக்க தலைவலி நீங்கும்.
இந்தக் கீரையை வாரத்தில் இரு நாள்கள் சாப்பிட்டால் போதும். அடிக்கடி சாப்பிட்டால் வாய்வு உண்டாகும். வாயுத் தொல்லை உள்ளவர்கள் இக்கீரையை உண்ணக் கூடாது. இரவிலும் வேறு மருந்து உண்ணும்போதும், இந்தக் கீரையை உண்ணக் கூடாது. பால் அருந்துவதால் உண்டாகும் நன்மை இக்கீரையை உண்பதால் உண்டாகும். ஜீரணச் சக்தியைப் பெருக்கும். பித்தத்தைத் தணிக்கும்.
தொண்டை ரணம், தொண்டை வலி ஆகியவற்றுக்கு அகத்திக் கீரையை பச்சையாக மென்று, சாற்றை உள்ளே விழுங்க குணமாகும்.
- ("பாட்டி சொன்ன பரம்பரை வைத்தியம்' எனும் நூலில் இருந்து)