எளிய சமையல குறிபபுகள்..

மோர்க் குழம்புக்கு மசாலா அரைக்கும்போது, தேங்காயை கொஞ்சம் குறைத்துக்கொண்டு கசகசா, கடுகு போட்டு அரைத்து கலைக்கினால் குழம்பு வாசனையோடு சுவையாக இருக்கும்.
எளிய சமையல குறிபபுகள்..

மோர்க் குழம்புக்கு மசாலா அரைக்கும்போது, தேங்காயை கொஞ்சம் குறைத்துக்கொண்டு கசகசா, கடுகு போட்டு அரைத்து கலைக்கினால் குழம்பு வாசனையோடு சுவையாக இருக்கும்.

வற்றல் குழம்பு செய்யும்போது குழம்பை இறக்கியவுடன் ஒரு டீ ஸ்பூன் வறுத்த எள் பவுடர் போட்டால் நல்லெண்ணெய் வாசனையுடன் அருமையாக இருக்கும்.

பரோட்டா அல்லது நாண் செய்ய மாவு பிசையும்போது குடிக்கிற சோடாவை தண்ணீருக்குப் பதிலாக ஊற்றி பிசைந்து பாருங்கள். பரோட்டா மிருதுவாக பஞ்சு போல மெத்து மெத்தென்று இருக்கும்.

ரசத்தை இறக்கி வைத்ததும், ஒரு துளி நெய் சேர்த்து பச்சை கொத்தமல்லியை பொடிப் பொடியாக நறுக்கிப் போடுங்கள். மணமும், ருசியும் எடுப்பாய் இருக்கும்.

துவரம் பருப்பை வேக வைக்கும்போதே தேங்காய்த் துண்டை நறுக்கிப் போடுங்கள். துவரம் பருப்பு சீக்கிரமாக வெந்துவிடும். வெண்ணெய் போல் குழைவாகவும் இருக்கும்.

சாம்பாரில் உப்பு அதிகமானால் கரண்டியை அடுப்பால் நன்றாக சூடு செய்து, சாம்பாரில் போட சூடான கரண்டி உப்பை எடுத்துவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com