சமையல் டிப்ஸ்

உருளைக் கிழங்கை சீவி ஓர் வெள்ளைத் துணியில் கட்டி, கொதிக்கும் நீரில் 5 நிமிடம் அழுத்திவைத்து, பின்னர் குளிர்ந்த உப்புத் தண்ணீரில் போட்டு எடுத்து வறுத்தால் வெள்ளை வெளேரென்று மொறுமொறுவென இருக்கும்.
சமையல் டிப்ஸ்


உருளைக் கிழங்கை சீவி ஓர் வெள்ளைத் துணியில் கட்டி, கொதிக்கும் நீரில் 5 நிமிடம் அழுத்திவைத்து, பின்னர் குளிர்ந்த உப்புத் தண்ணீரில் போட்டு எடுத்து வறுத்தால் வெள்ளை வெளேரென்று மொறுமொறுவென இருக்கும்.

ரஸ்க் அல்லது ட்ரை பிரட்டை மிக்ஸியில் நன்றாகப் பொடி செய்து, ஒரு தேக்கரண்டி நெய் அல்லது எண்ணெயில் பொடித்து வைத்துகொண்டால் கிரேவியில் உப்பு அதிகமாகிவிட்டால் பொடித்துவைத்துள்ள ரொட்டித் தூளை சிறிது தூவி அதிகப்படியான உப்பை சரி செய்துவிடலாம். வறுவலில் சுவை கூட்ட இந்த வறுத்த ரொட்டித் தூளை ஒரு தேக்கரண்டி சேர்க்கலாம்

இளநீர் வழுக்கையை விழுதாக அரைத்து தயிர் சாதத்துடன் கலந்து சாப்பிட்டால், அட்டகாசமான சுவையுடன் இருக்கும்.

பொங்கலில் தண்ணீர் அதிகமாகிவிட்டால், சிறிதளவு ரவையை வறுத்து பொங்கலோடு சேர்க்க வேண்டும். பின்னர் கிளறினால் பொங்கல் கெட்டியாகிவிடும். ருசி கூடுமே தவிர குறையாது.

மீதமான பழைய சாதத்தை மிக்ஸியில் அரைத்து, இட்லி மாவுடன் கலந்து தோசையாக வார்க்கவும். கல்லில் துளியும் ஒட்டாமல் எண்ணெயும் குடிக்காமல் பேப்பர் ரோஸ்ட் போல அருமையான சுவையுடன் இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com