தமிழ்க் கற்றல் பயிற்சியும் தானத்திற்கு முயற்சியும்!

தமிழகத்தில் பிறந்து 20-ஆண்டுகளாக சிங்கப்பூரில் வசித்து வருபவர் அனுராதா வெங்கடேஸ்வரன்.  பட்டிமன்ற பேச்சாளர், மக்கள் தொலைக்காட்சியில் "தமிழ் பழகுக' என்ற நிகழ்ச்சி  தொகுப்பாளர்,
தமிழ்க் கற்றல் பயிற்சியும் தானத்திற்கு முயற்சியும்!


தமிழகத்தில் பிறந்து 20-ஆண்டுகளாக சிங்கப்பூரில் வசித்து வருபவர் அனுராதா வெங்கடேஸ்வரன்.  பட்டிமன்ற பேச்சாளர், மக்கள் தொலைக்காட்சியில் "தமிழ் பழகுக' என்ற நிகழ்ச்சி  தொகுப்பாளர், பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழ் மாணவர்களுக்கு இணையம் வழியாக ஆத்திச்சூடி, திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சுப்போட்டி போன்றவற்றை நடத்தி வருபவர். இவரிடம் பேசியதிலிருந்து:

""சிங்கப்பூரில் உள்ள சர்வதேச பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றுகிறேன்.  இங்கே படிக்கும் குழந்தைகளுக்கு தமிழ் கற்பித்தாலும், வெளியிலும் தமிழ்க் குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும் என்பதே என்னுடைய நீண்ட நாள் கனவு. அந்த கனவை மெய்பிக்கும் வகையில் "இமயம் தமிழ்விழா' என்ற விழிப்புணர்வை நடத்திக் கொண்டு வருகிறோம்.

அதில் "ஒரு வார்த்தை ஒரு லட்சம்' சொல் விளையாட்டுப் போட்டியை நடத்தினோம். அதற்கு பிறகு பட்டிமன்றம் நடத்தியும் அதுவே குறளின் குரலாக மாற்றப்பட்டு வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக மாணவர்கள் ஒரு குரல் காட்டினால் அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டு அதற்கான பதிலை சொல்ல வேண்டும். இந்த மாதிரியான போட்டிகளை நடத்தும் போது மாணவர்கள் திருக்குறளை படிப்பதற்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது. ஏனென்றால்  பெரும்பாலான தமிழர்கள் வாழும் நாட்டில் பாடத்திட்டத்தில் திருக்குறள் கிடையாது.

முதலில் இங்கே வாழுகின்ற தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தான் இப்படிப்பட்ட போட்டிகள் நடந்தது ஆனால் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ் ஆர்வலர்களும் பேச்சாளர்களும் கேட்டுக் கொண்ட காரணமாக இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், லண்டன், மஸ்கட், இலங்கை, மலேசியா போன்ற நாடுகளில் உள்ள மாணவர்கள் அனைவரும் கற்றுக் கொள்ளும் விதத்தில் கற்றல் பயணமாக இது அமைந்தது.

முதலில் நான்கு பள்ளிகள் மட்டுமே இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர் ஆனால் தற்போது நான்கு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 25 பள்ளிகளைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.

தமிழ்மொழி பண்பாட்டு கழகத்தின் அவ்வையார் விழாவிற்கு ஏற்பாட்டுக் குழுத்தலைவராகவும் துணைத்தலைவராகவும் இருந்தேன் அதனால் இந்நாட்டில் பெரிய அளவில் அதாவது ஒரே நேரத்தில் 320- பள்ளிகளுடைய  மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தினேன். அதில் அவ்வையாரின் ஆத்திச்சூடி, நாடகம், பெரியவர்களுக்காக மொழி சார்ந்த போட்டிகளும் நடத்தினோம். இவ்விழாவில் இங்குள்ள அமைச்சர், அரசுத்தறை அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த பண்பாட்டு கழகம் தான் எங்களுக்கு ஒரு தளமாக இருந்து வருகிறது.

சிங்கப்பூர் நாட்டைப் பொறுத்தவரைக்கும் காரோனா ஊரடங்கில் பலர் வேலையில்லாமல் தவித்தனர். அச்சமயத்தில் இங்குள்ள நண்பர்கள் எல்லாம் சேர்ந்து நிதி திரட்டி அதை உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களுக்கும். வறுமையில் வாடிக் கொண்டிருந்த நபர்களுக்கும்  உதவியை செய்தோம். இதைவிட சில மாணவர்களுக்கு உதவித் தொகை கொடுத்து படிக்க வைத்தோம்.

கடந்த 2015-ஆம் ஆண்டு என் கணவருக்கு சிறுநீரகம் பாதிப்பு ஏற்பட்டதால் என்னுடைய சிறுநீரகத்தை தானம் செய்தேன். அதன் பிறகுதான் நீச்சல், சைக்கிள் பந்தயம், வாகனங்கள் ஓட்டினேன். தானம் கொடுப்பதற்கு முன்பு இருந்தது போல இப்போதும் இயல்பான வாழ்க்கை வாழ்கிறேன்.

 ஒரு மேடையில் இந்த நிகழ்வை சுட்டிக்காட்டியும் யார் ஒருவர் இறந்து விட்டாலும் அவருடைய சிறுநீரகத்தை 6 மணி நேரத்திற்குள் தானம் கொடுக்கலாம் என்று பேசினேன். இந்த விழிப்புணர்வு பேச்சு மூலமாக புத்த மத பிச்சு, மற்றும் இந்நாட்டில் வாழும் பல இனத்தவர்கள் இங்கே சிறுநீரகத்தால் பாதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு தானம் கொடுத்து காப்பாற்றி இருக்கின்றனர். வருங்காலங்களில் இந்நாட்டின் அனுமதியோடு இது போன்ற விழிப்புணர்வை அனைத்து கல்விக் கூடங்களிலும், வர்த்தக நிறுவனங்களிலும் நடத்தலாம் என்று திட்டமிட்டுள்ளேன்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com