சிலையால் சீரான வருமானம்!

"ஒற்றுமைக்கான சிலை' இந்திய விடுதலை இயக்கத்தலைவரான வல்லபாய் பட்டேல் நினைவாக அமைக்கப்பட்டது.
சிலையால் சீரான வருமானம்!

"ஒற்றுமைக்கான சிலை' இந்திய விடுதலை இயக்கத்தலைவரான வல்லபாய் பட்டேல் நினைவாக அமைக்கப்பட்டது. உலகின் மிகப் பெரிய சிலையான இந்தச் சிலை இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் நர்மதா மாவட்டம், கெவாடியா அருகே உள்ள சர்தார் சரோவர் அணை எதிரேயுள்ள சாது பெட் தீவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை 20,000 சதுர மீட்டர் அளவுள்ள இடத்தில், 12 சதுர கி.மீ. பரப்பளவினைக் கொண்ட ஏரியில் அமைந்துள்ளது. இந்தச் சிலையின் உயரம் 182 மீட்டர் (597 அடி).

கெவாடியா பகுதியில் இளஞ்சிவப்பு நிற ஆட்டோக்கள் ஒன்றல்ல இரண்டல்ல... அறுபது ஓடுகின்றன. இந்த ஆட்டோக்கள் அனைத்தும் மின்சார பேட்டரியில் ஓடுபவை. இயக்குவதோ முழுக்க முழுக்க பழங்குடிப் பெண்கள். வீட்டையும் ஆட்டோவையும் நிர்வகிக்கக் கற்றுக் கொண்ட பெண்கள். வீட்டில் வருமானம் இன்றி வறுமையில் வாடியவர்களுக்கு விடியல் கிடைத்துள்ளது. இருப்பதை வைத்து வாழ்க்கையை ஓட்டி கொண்டிருந்தவர்களுக்கு இப்போது, தினமும் ரூ.900 வரை ஆட்டோ ஓட்டுவதன் மூலம் வருமானம் கிடைக்கிறது.

இந்தப் பெண்களுக்கு மின் ஆட்டோ சொந்தமில்லை. வாடகைக்கு எடுத்து ஓட்டுகிறார்கள். வாடகை போக தினமும் கிடைக்கும் வருமானம்தான் இந்த 900 ரூபாய். பக்கத்தில் இருக்கும் ரயில் நிலையத்திற்கும் சிலை வளாகத்திற்கும் போக வர இந்த ஆட்டோக்கள் பயன்படுகின்றன. படேல் சிலையைக் காண சுற்றுலாப்பயணிகள் அதிகம் பேர்கள் வருவதால் இந்தப் பகுதி மின் ஆட்டோக்களுக்கு சவாரி எளிதாகக் கிடைத்துவருகிறது. அதனால் பழங்குடி பெண்களுக்கு வருமானம் சீராகக் கிடைத்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com