தேங்காய் போளி

மைதா மாவுடன்  சோடாமாவு, உப்பு சேர்த்து சலித்து, 1 மேசைக்கரண்டி  நெய், சிறிது பால் விட்டு மிருதுவாகப்  பிசைந்து  ஒரு மணி நேரம்  ஊற விடவும்.
தேங்காய் போளி


தேவையானவை

தேங்காய் - 1
ஏலக்காய்ப் பொடி  - அரை தேக்கரண்டி
சோடா மாவு  -  2 சிட்டிகை
மைதா மாவு -  அரை கிலோ
சர்க்கரை  - 300 கிராம்
நெய் -  100 கிராம்

செய்முறை:  

மைதா மாவுடன்  சோடாமாவு, உப்பு சேர்த்து சலித்து, 1 மேசைக்கரண்டி  நெய், சிறிது பால் விட்டு மிருதுவாகப்  பிசைந்து  ஒரு மணி நேரம்  ஊற விடவும். தேங்காயைத் துருவவும், வாணலியில்  நெய்விட்டு  தேங்காய்த் துருவலைப் போட்டு நீர்ப்பசை  வற்றும்  வரை வதக்கி  எடுக்கவும்.  தேங்காய்த் துருவலுடன் சர்க்கரை,  ஏலக்காய்ப் பொடி  சேர்த்து மிக்ஸியில்  கரகரப்பாகப் பொடித்து எடுக்கவும். பிசைந்து வைத்திருக்கும்  மாவை எடுத்து  சம அளவு உருண்டைகளாக  உருட்டிக் கொள்ளவும்.  ஓர்   உருண்டையை  எடுத்து கனமாக இட்டு  நடுவில்  தேங்காய்ப் பூரணத்தை  தேவையான  அளவு  வைத்து மடித்து அதை பூரிக்கட்டையால்  மறுபடியும்  உருட்டிக்  கொள்ளவும்.  தேசைக்கல்லை காய வைத்து  ஒரு போளியைப் போட்டு  சுற்றிலும்  நெய்விடவும். ஒரு புறம் வெந்ததும் திருப்பிப் போட்டு  சுற்றிலும்  நெய்விட்டு  வேக வைத்து  எடுக்கவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com