தேங்காய்ப் பால் சொதி  சூப்

உருளைக்கிழங்கை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும். கேரட்டையும் பீன்ûஸயும் மிகவும் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை நன்கு பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தேங்காய்ப் பால் சொதி  சூப்


தேவையானவை:

தேங்காய்ப்பால் - இரண்டு டம்ளர்
கேரட் - 1
வெங்காயம் - 2
பூண்டு - 2 பல்
உப்பு, கறிவேப்பிலை - தேவைக்கேற்ப
உருளைக்கிழங்கு - 1
பீன்ஸ் - 2
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய் - 2
முந்திரிப் பருப்பு - 15
எலுமிச்சம் பழம் - 1

செய்முறை:

உருளைக்கிழங்கை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும். கேரட்டையும் பீன்ûஸயும் மிகவும் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை நன்கு பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் 4 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு ஆகியவற்றை வெண்ணெய் போல் அரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெண்ணெய்யை இட்டுக் காய்ந்ததும், முந்திரிப்பருப்பு கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து பொரித்து அதனுடன் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அதில் துருவிய உருளைக் கிழங்கு கேரட், பீன்ஸ் அரைத்து வைத்துள்ள மசாலா போட்டு புரட்டி அதில் இரண்டாவது மூன்றாவது எடுத்த தேங்காய்ப் பால் விடவும். 15 நிமிடம் கொதித்து காய்கறிகள்நன்கு வெந்ததும், தேவையான அளவு உப்பு சேர்த்து, தனியாக வைத்துள்ள ஒரு கப் கெட்டியான தேங்காய்ப்பாலையும் ஒரு எலுமிச்சம் பழத்தையும் பிழிந்து நன்கு கலந்து மிதமான சூட்டில் பரிமாறவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com