கீரை டிப்ஸ்

அளவுக்கு  மீறி காரம்,  உப்பு,  புளி  இவைகளைச் சேர்த்துச் சமைப்பதால் கீரையிலுள்ள சத்துகள்  அழிந்து விடும்.
கீரை டிப்ஸ்

அளவுக்கு  மீறி காரம்,  உப்பு,  புளி  இவைகளைச் சேர்த்துச் சமைப்பதால்  கீரையிலுள்ள சத்துகள் அழிந்து விடும்.

டர்னிப்  சமைக்கும்போது அதன் மேல் இருக்கும் ஊட்டச் சத்துகள்  நிறைந்த  இலைகளையும் சேர்த்துப் பயன்படுத்த வேண்டும். 

மருந்துண்ணும் காலத்தில்  அகத்திக் கீரையைச் சாப்பிடக் கூடாது.

வாய்ப்புண்  உடையவர்கள்   பச்சையாகவுள்ள  மணத்தக்காளிக்  கீரையின்  சாறை  வாய்  கொப்பளித்து  பிறகு  வெளியேற்றிவிடலாம்.

கீரைகளை  வேக வைத்த நீரைக்  கீழே கொட்டுவதை  விட,  கீரையும்  நீரும் ஒன்றுபடக் கடைவதே சிறந்தது.

பச்சையாக உண்ணும்  முட்டைக்கோஸ்  இரண்டரை மணி நேரத்தில்  செரிமானமாகும்.  மேலும்  அதிக சத்துகள்  உடம்பில் சேரும்.

நரம்புத் தளர்ச்சி  உள்ளவர்கள்  மணத்தக்காளிக்  கீரையை  உணவில்  கட்டாயம்  சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com