முகப்பு வார இதழ்கள் மகளிர்மணி
பாட்டி வைத்தியம்
By | Published On : 08th May 2022 04:57 PM | Last Updated : 08th May 2022 04:57 PM | அ+அ அ- |

சூட்டினால் அடிக்கடி சிறுநீர் கழித்தால், விளக்கெண்ணெயை தொப்புளிலும், நகக் கண்களிலும் தடவினால் உடனே நின்றுவிடும். சுண்ணாம்பை நகக் கண்ணில் மட்டும் தடவலாம்.
அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் எலுமிச்சைப் பழத்தை குளிர்ந்த நீரில் பிழிந்து சாப்பிடுங்கள்.
தோல் உரிந்த வெங்காயத்துடன் வெல்லத்தை சேர்த்து சாப்பிட்டால் பித்தம் போகும்.
துளசி, மிளகு, சிறிது கற்கண்டு ஆகிய மூன்றையும் வெந்நீரில் போட்டு மூடி வைத்து, அவ்வப்போது குடித்தால் சளி குறையும்.
பலாச் சுளையை தேனில் நனைத்து சாப்பிட்டால், இருமல் போய்விடும்.
எலுமிச்சை பழச்சாறை வெந்நீரில் கலந்து, சிறிது தேனையும் சேர்த்து சாப்பிட தொண்டைப் புண், தொண்டை வலி ஆகியன குறையும்.
(பாரம்பரிய மருத்துவம் எனும் நூல் தகவல்: முக்கிமலை நஞ்சன்)