பிரண்டை வடாம்

பிரண்டை வடாம்

பச்சரிசியை நீரில் 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஜவ்வரிசியை இரண்டு மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும்

தேவையானவை: 

பச்சரிசி- 200 கிராம்
ஜவ்வரிசி- 100 கிராம்
வத்தல் மிளகாய்-5
பிரண்டை -4  கம்பு
பெருங்காயப் பொடி- 1 தேக்கரண்டி
எண்ணெய்- 4 தேக்கரண்டி
உப்பு- தேவையானது

செய்முறை: 

பச்சரிசியை நீரில் 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஜவ்வரிசியை இரண்டு மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும். 

பச்சரியை அரைத்து கூடவே ஜவ்வரிசி, வத்தல் மிளகாய், பொடியாய் நறுக்கிய பிரண்டை, பெருங்காயப்பொடி, உப்பு சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும். கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, தேவையான தண்ணீரைவிட்டு கொதி வந்ததும் அரைத்த விழுதை கொஞ்சம் நீர் விட்டு கரைத்து விட வேண்டும். 

பின்னர் எண்ணெய் விட்டு கூழ்போல காய்ச்சி கீழே இறக்க வேண்டும். மாவு கையில் ஒட்டாமல் இருந்தால், அதுதான் சரியான பதம். ஒரு வெள்ளைத் துணியை வெயிலில் விரித்து, கூழ் மாவை முள்ளுத் தேன் குழல் அச்சில் போட்டு, பிழிய வேண்டும். சிறிது, சிறிதாகப் பிழிந்து நன்றாகக் காய்ந்ததும் விரித்து எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com