ஆரோக்கியமாக வாழ 10 கருத்துகள்

அனைவருக்குமே உடலை கச்சிதமாய் வைத்துக் கொள்ள ஆசை.   ஆரோக்கியமாக வாழ உதவும் வழிமுறைகள் பின்வருமாறு:
ஆரோக்கியமாக வாழ 10 கருத்துகள்


அனைவருக்குமே உடலை கச்சிதமாய் வைத்துக் கொள்ள ஆசை. ஆரோக்கியமாக வாழ உதவும் வழிமுறைகள் பின்வருமாறு:

"சூப்பர் டயட்ஸ்' என்று கூறி சில உணவுகளால் எடை குறையும் என்கிறார்கள்.  இது உண்மையல்ல. உடலில் இழக்கும் கலோரியின் அளவுக்கு ஈடாக ஏற்றினால் எடை அப்படியே இருக்கும். 

எடை அதிகரிக்க சர்க்கரை காரணம் கிடையாது. அளவாக சர்க்கரையை சாப்பிடுவதும் பாதுகாப்பானதே! கலோரியை கூட்டாத சர்க்கரை பதார்த்தங்களை சாப்பிடுவதால் உடல் எடை கூடாது.

3 தடவை சாப்பிட்டாலும், 6 தடவை சாப்பிட்டாலும் கலோரி ஒரே அளவுதான் ஏறும்.  எவ்வளவு கலோரி சாப்பிடுகிறோம் அல்லது இழக்கிறோம் என்பதை வைத்தே உடல் கொழுப்பு முடிவாகிறது.

 உடற்பயிற்சி செய்துவிட்டு,  குளிர்ந்த நீரில் குளிப்பதால் உடல் குளிராது. உடற் பயிற்சி மூலம் உடல் இறுகியிருந்தால் அதனை சரிசெய்யும்.

உடற்பயிற்சி முடிந்தவுடன் "சப்ளிமென்டரி'-களை சாப்பிட்டால்,  எடை குறையாது.  மருத்துவர் ஆலோசனையே முக்கியம்.

உடற்பயிற்சி மார்பக அளவை மாற்றாது.  ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் அப்படி செய்ய இயலாது.

குந்தி உட்காருவதால் முட்டிக்கு வலு என்பது சரியல்ல. மாறாக, மாலையில் பயிற்சி செய்வது உதவும். ஆனால், மருத்துவரை கலந்து ஆலோசித்து மேற்கொள்வது நல்லது. முட்டிகளில் காயம் இருக்குமெனில், மருத்துவரின் ஆலோசனை மிக முக்கியமானது. 

காலையில் உடற்பயிற்சி செய்வது நல்லது. இருப்பினும் மாலையில் உடற்பயிற்சி செய்தால் தசை நார்களுக்கு வலுவூட்டும்.  உடல், பால் சார்ந்த பண்புக் கூறுகளை வளர்ச்சி அடைய செய்யும்.  காலை ஆனாலும், மாலை ஆனாலும் சரி; தினமும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி உடற்பயிற்சி செய்வது சிறப்பு. 

ஓடுவது எடையைக் குறைக்கும். ரத்தம் சார்ந்த விஷயங்களின் இயக்கத்துக்கு ஓடுவது நல்லது. இதைவிட நீச்சல், சைக்கிள் ஓட்டுவது ஆகியன மிகவும் நல்லது. எது செய்தாலும் கலோரி குறைப்புக்கு உதவினால் சரி.

உடற்பயிற்சி முடிந்ததும் ஊட்டச்சத்து நிறைந்த உணவைச் சாப்பிட வேண்டும் என்பது சரியா? அது கட்டாயம் அல்ல. மாறாக,  2 மணி நேரத்துக்குள் சாப்பிடுவது நல்லது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com