பூண்டுப் பால் 

ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அதில் பூண்டைத் தட்டிப் போட்டு நன்கு வேக வைக்க வேண்டும்.
பூண்டுப் பால் 

தேவையான பொருள்கள்:

பால் - 2 கிண்ணம்
பூண்டு - 2 பல்
பனங்கற்கண்டு - 2 தேக்கரண்டி
மிளகுத் தூள் - 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

செய்முறை: 

ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அதில் பூண்டைத் தட்டிப் போட்டு நன்கு வேக வைக்க வேண்டும். பூண்டு நன்கு வெந்ததும் பனங்கற்கண்டு, மிளகுத்தூள், மஞ்சள்தூள் ஆகியன சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைக்கவும். பின் அதை இறக்கி, பூண்டை நன்கு மசித்தால் பூண்டு பால் தயார். தினமும் இரவு எடுத்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com