சமையல் குறிப்புகள்...

தோசைக்கு அரைத்த மாவில் ஐம்பது கிராம் கொத்துக் கடலையும்,  ஐம்பது கிராம் பட்டாணியும் சேர்த்து ஊறவைத்து அரைத்து எடுத்து  தோசை மாவுடன் சேர்த்துத் தோசை சுட்டால் முறுமுறுவென்று இருப்பதோடு சத்தும் கிடைத்துவி
சமையல் குறிப்புகள்...


தோசைக்கு அரைத்த மாவில் ஐம்பது கிராம் கொத்துக் கடலையும், ஐம்பது கிராம் பட்டாணியும் சேர்த்து ஊறவைத்து அரைத்து எடுத்து  தோசை மாவுடன் சேர்த்துத் தோசை சுட்டால் முறுமுறுவென்று இருப்பதோடு சத்தும் கிடைத்துவிடும்.

 தோசை மாவு அரைத்த இரண்டு மணி நேரத்தில் புளிக்கச் செய்வதற்குச் சிறிது மிளகாய் வற்றல் காம்புகளைப் போட்டு வைத்தால் விரைவில் மாவு புளித்து தோசை நன்றாக இருக்கும்.

பிடி  கொழுக்கட்டை செய்யும்போது கொதிக்கும் நீரில் நன்றாக நறுக்கிய காரட், பீன்ஸ், பட்டாணி சேர்த்து வேகவைத்து, அரிசி ரவையுடன் சேர்த்து வெஜிடபிள் கொழுக்கட்டை செய்யலாம்.

வெள்ளை பூசணிக்காயை பூந்துருவலாகத் துருவி  உப்பைச் சேர்த்து, இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, கடுகு தாளித்து தயிரில் கலந்து தயிர் பச்சடி செய்யலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com