பாஸ்தா சுண்டல் 

பாஸ்தாவில் உப்பு சேர்த்து,  10 நிமிடங்கள் தண்ணீரில் போட்டு எடுத்து மிருதுவாக வேக வைத்துக் கொள்ளவும். தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும்.
பாஸ்தா சுண்டல் 

தேவையானவை:

மக்ரோனி பாஸ்தா- அரை கிண்ணம்
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு- கால் தேக்கரண்டி
வேர்க்கடலை- 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை- சிறிதளவு
பச்சை மிளகாய்-1
கரம் மசாலா- 2 சிட்டிகை
தேங்காய்த் துருவல்- 1 மேசைக் கரண்டி
உப்பு- தேவையான அளவு

செய்முறை: 

பாஸ்தாவில் உப்பு சேர்த்து,  10 நிமிடங்கள் தண்ணீரில் போட்டு எடுத்து மிருதுவாக வேக வைத்துக் கொள்ளவும். தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வேர்க்கடலை சேர்த்து வதக்கவும். அதில் வேக வைத்த பாஸ்தாவை போடவும். 2 தேக்கரண்டி தண்ணீர் தெளித்து, கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் சிறிய தீயில் வைத்து வேக வைக்கவும். தேவைப்பட்டால் தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கலந்து, இறக்கிச் சூடாகப் பரிமாறவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com