வனப் பகுதிக்கு பெண் பெயர்!

ஒடிஸ்ஸா மாநிலத்துக்கு உள்பட்ட பொனாய் கிராமத்தில் 4 ஏக்கரில் வனப் பகுதி உள்ளது. இதற்கு "சரோஜினி வனம்' என்று பெயர்.
வனப் பகுதிக்கு பெண் பெயர்!


ஒடிஸ்ஸா மாநிலத்துக்கு உள்பட்ட பொனாய் கிராமத்தில் 4 ஏக்கரில் வனப் பகுதி உள்ளது. இதற்கு "சரோஜினி வனம்' என்று பெயர்.

இந்த வனத்துக்கு சாமானியப் பெண்ணான சரோஜினியின் பெயர் சூட்டப்பட்டதன் காரணம் குறித்து வனத்துறையினர் கூறியதாவது:

""பொனாய் பகுதியில் சுரங்கப் பணிகள் நடைபெற்றன. இதனால் அங்கிருந்த வனப் பகுதிகள் பாதிக்கப்பட்டன. எனவே, மீண்டும் வனப் பகுதியை உருவாக்க வனத்துறை முடிவு செய்து, 4 ஏக்கர் ஒதுக்கப்பட்டது.

இந்த இடத்தில் சரோஜினி என்ற பெண், 2 ஆண்டுகளாக மரக்கன்றுகளை நட்டு, பராமரித்தார். அவரது அர்ப்பணிப்பால் மரங்கள் வளர்ந்து வனப் பகுதியாகிவிட்டன. இதையடுத்து, சரோஜியின் பெயரையே வனத்துக்குச் சூட்ட முடிவு செய்யப்பட்டது'' என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com