பொள்ளா வடை (கேரளம்)

இட்லி அரிசியைக் கழுவி, புளித்த தயிர் சேர்த்து 3 மணி நேரம் ஊற வைக்கவும், இத்துடன் உப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயத் தூள் சேர்த்து அரைக்கவும், கறிவேப்பிலையைக் கிள்ளி மாவில் சேர்க்கவும். 
பொள்ளா வடை (கேரளம்)

தேவையான பொருள்கள்:

இட்லி அரிசி- 1 கிண்ணம்
புளித்த தயிர்- 1 கிண்ணம்
தேங்காய்த் துருவல்- கால் கிண்ணம்
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
மிளகாய் வற்றல்-5
கறிவேப்பிலை- சிறிதளவு
பெருங்காயத் தூள்- கால் மேசைக் கரண்டி

செய்முறை: 


இட்லி அரிசியைக் கழுவி, புளித்த தயிர் சேர்த்து 3 மணி நேரம் ஊற வைக்கவும், இத்துடன் உப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயத் தூள் சேர்த்து அரைக்கவும், கறிவேப்பிலையைக் கிள்ளி மாவில் சேர்க்கவும். சிறிய வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் போட்டு, பொரித்தெடுக்கவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com