உணவும் ருசியும்...!

ஒரு கைப்பிடி வெந்தயத்தை ஊற வைத்து, அரைத்து மோரில் கலக்கி பச்சை மிளகாய்களை ஊற வைத்து, பின்னர் காயப் போட்டால் மிளகாய் பார்க்க மென்மையாகவும் அதிக ருசியாகவும் இருக்கும்.
உணவும் ருசியும்...!

ஒரு கைப்பிடி வெந்தயத்தை ஊற வைத்து, அரைத்து மோரில் கலக்கி பச்சை மிளகாய்களை ஊற வைத்து, பின்னர் காயப் போட்டால் மிளகாய் பார்க்க மென்மையாகவும் அதிக ருசியாகவும் இருக்கும்.

இடியாப்பத்துக்கு மாவு பிசையும்போது, சிறிதளவு வெண்ணெய் அல்லது எண்ணெய் சேர்த்துகொண்டால் சுலபமாகப் பிழியலாம்.

வத்தக்குழம்பு தாளிக்கும்போது, ஆரஞ்சு பழத்தோலையும் சேர்த்துக் கொண்டால் நல்ல சுவையுடன் இருக்கும்.

பிளாஸ்கில் சூடான திரவத்தை ஊற்றும்போது, பிளாஸ்கை சாய்வாக வைத்து ஊற்ற வேண்டும்.

உளுந்தம் பருப்பை ஊற வைத்து நைஸாக அரைக்க வேண்டும். அதை அரைத்து அள்ளப்போகும்போது அதனுடன் வேகவைத்த உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து வடை செய்தால் நன்றாக இருக்கும்.

உருளைக்கிழங்கை வேக வைத்து அரைத்து தோசை ஊற்றினால் நன்றாகவும் சுவையாகவும் இருக்கும்.

சமைக்கும்போது, குழம்பிலோ, கூட்டிலோ உப்பு கூடினால் பச்சை உருளைக்கிழங்கை வெட்டி குழம்பிலோ, கூட்டிலோ சேர்க்கவும். இவ்வாறு செய்தால் உப்பு குறைந்து நல்ல சுவையுடன் இருக்கும்.

முளைவிட்ட பச்சைப்பயிறு சாப்பிட்டால் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

தானியங்களை நன்கு கழுவி, இரவு முழுவதும் சுத்தமான நீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் மெல்லிய துணியில் ஊறிய தானியங்களை காற்றோட்டமான இடத்தில் தொங்கவிட்டால், 8 மணி நேரத்தில் பயிர்கள் முளைவிடும்.  முளைவிட்ட தானியங்களைச் சாப்பிட்டால் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.

பாதாம் கொட்டையில் முளைகட்டும்போது, உடலின் கொழுப்பு அளவை குறைக்கும் லைபேஸ் என்ற என்சைமை உருவாக்குகிறது.  ஆக்ஸிஜன் எதிர்பொருள்கள் மிகுந்த முளைகட்டும் தானியங்களைச் சாப்பிட்டால் முதுமை தள்ளிப்போகும்.

முளைக்கட்டிய வெந்தயங்களை சாப்பிடுவதால்,  சர்க்கரை அளவு கட்டுப்படும். கர்ப்பப்பை நோய்கள், வெள்ளைப்படுதல், அல்சரை குணப்படுத்தலாம்.  கொள்ளு முளைப்பயிரை சாப்பிட்டால்,  உடல் ஆரோக்கியம் கூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com