வேண்டியதும் வேண்டாததும்..

சமையல் குறிப்புகள்: மறக்க கூடாத சில விதிமுறைகள்
வேண்டியதும் வேண்டாததும்..

 ரசம் அதிகமாகக் கொதிக்கக் கூடாது.

 காபிக்கு பால் நன்றாகக் காயக் கூடாது.

 மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக் கூடாது.

 கீரைகளை மூடிப் போட்டு சமைக்கக் கூடாது.

 காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக் கூடாது.

 சூடாக இருக்கும்போது, எலுமிச்சம்பழம் பிழியக் கூடாது.

 தக்காளியையும், வெங்காயத்தை யும் ஒன்றாக வதக்கக் கூடாது.

 ஃபிரிட்ஜில் வாழைப் பழமும் உருளைக் கிழங்கும் வைக்கக் கூடாது.

 பெருங்காயம் தாளிக்கும்போது, எண்ணெய் நன்றாகக் காயக் கூடாது.

 தேங்காய்ப்பால் சேர்த்தவுடன் குழம்பு அதிகமாகக் கொதிக்கக் கூடாது.

 குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக் கூடாது.

 குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும்போது கொத்தமல்லி இலையை போடக் கூடாது.

 மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.

 புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாகக் கரைக்க வேண்டும்.

 ஜவ்வரிசி வற்றலுக்கு அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.

 போளிக்கு மாவு கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண்டும்.

 குருமாவை இறக்கும்போது கரம் மசாலாவைச் சேர்க்க வேண்டும்.

 பச்சை கற்பூரம் டப்பாவில் நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.

 குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.

 வாழைப்பூவை முதல் நாள் இரவே நறுக்கி தண்ணீரில் போட வேண்டும்.

 கடலை உருண்டைக்கு வெல்லப்பாகு முத்தின பாகாக இருக்க வேண்டும்.

 வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய் மேலே வரும் வரை கொதிக்க விட வேண்டும்.

-நாகஜோதி கிருஷ்ணன், சேப்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com