தேவையானவை:
மணத்தக்காளிக் கீரை- 1 கிண்ணம்
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 2 பல்
நெய், மிளகுத் தூள்- தலா அரை தேக்கரண்டி
தக்காளி -1
சீரகம், கொத்தமல்லி இலைகள், துருவிய கேரட்- தலா 1 தேக்கரண்டி
செய்முறை:
மணத்தக்காளி இலை, வெங்காயம், பூண்டு, தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி, சீரகம், மூன்று டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். பின்னர், அதை வடிகட்டி, அதனுடன் மிளகுத்தூள், நெய், கொத்தமல்லி இலைகள், கேரட் துருவல் சேர்த்து நன்றாகக் கலக்கி பரிமாறவும்.