தேவையானவை:
கண்டந்திப்பிலி , அரிசித் திப்பிலி - தலா 6 குச்சிகள்
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 2
மிளகு சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
சாம்பார்ப் பொடி - 2 மேசைக்கரண்டி
புளிக்கரைசல் - அரை கிண்ணம்
வெல்லம் - ஒரு தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - ஒரு குழிக்கரண்டி.
செய்முறை:
இருவகை திப்பிலிகளை வறுத்துப் பொடிக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலையைத் தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி, தக்காளி பிழிந்துவிட்டு, உப்பு, சாம்பார்ப் பொடி சேர்த்து வதக்கி, புளிக்கரைசல் சேர்த்து ஒரு கொதி வந்ததும், திப்பிலிப் பொடி, மிளகு சீரகத்தூள் சேர்த்து, மறு கொதி வந்ததும் வெல்லம் சேர்த்து நல்லெண்ணெய் பிரிந்ததும் இறக்கி வைக்கவும்.