தேவையானவை:
உளுந்து அல்லது துவரம் பருப்பு, தனியா, மணத்தக்காளி வற்றல் , சுண்டைக்காய் வற்றல் - தலா கால் கிண்ணம்
உலர்ந்த வேப்பம்பூ , உலர்ந்த கறிவேப்பிலை - தலா ஒரு கைப்பிடி
சுக்கு - ஒரு துண்டு,
மிளகு, சீரகம் - தலா ஒரு தேக்கரண்டி
பெருங்காயப்பொடி - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
மேற்கூறிய அனைத்துப் பொருள்களையும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து, ஒன்றாக்கி, கல் உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும். சாதத்துடன் கலந்து சாப்பிடலாம்.