சுடச்சுட

  
  15

  கேள்வி: பாம்புகளை விரட்ட கினிக்கோழி வளர்ப்பார்களாமே? அது என்ன கினிக்கோழி?
   பதில்:
   பாம்பைப் பார்த்தால் சிலருக்கு அருவருப்பு வரும். வேறு சிலருக்குப் பயம் வரும். அதனால்தான் பாம்பென்றால் படையும் நடுங்கும் என்று நமது முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். சினிமாக்களில் பாம்பைக் கண்டு சூப்பர் ஸ்டார்கள்கூட நடுங்கும் காட்சிகளை அமைத்து நம்மைச் சிரிக்க வைப்பார்கள். நாமும் சிரித்து மகிழ்வோம்.
   ஆனால், இந்தக் கினிக் கோழி இருக்கிறதே, இது அப்படியல்ல. நிஜமான ஹீரோ. பாம்பைக் கண்டால் இவருக்குப் பயமோ அருவருப்போ வருவதில்லை. மாறாக,
   மூக்குக்கு மேல் கோபம் கொப்பளித்துக் கொண்டு வரும். இதற்கு என்ன காரணம் என்று இதுவரை யாரும் கண்டறிந்து சொல்லவில்லை.
   சரி, இப்படிக் கோபம் வந்தவுடன், கினிக் கோழி என்ன செய்யும்?
   தனது உடலைச் சிலிர்த்துக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் தயாராகி விடும். "பாம்பு என்ன ஜுஜுபி, அதைவிட எனது அலகுக்குப் பவர் அதிகம்' என்கிற நினைப்பில் பாம்பைக் கொத்துவதற்காக முயற்சி செய்யும்.
   இப்படிக் கினிக்கோழியார் உடம்பைச் சிலிர்த்துக்கொண்டு, தனது அலகை நீட்டிக் கொண்டு, பாய்ந்து வருவதைக் கண்டவுடன் பாம்புக்கு தொடை நடுங்கி விடும். இவன் நம்மைச் சும்மாவிடமாட்டான் போலிருக்கே என்ற எண்ணத்தில், அந்த இடத்தை விட்டே எஸ்கேப் ஆகி விடும். பாம்புக்கு அத்தனை பயம், கினிக்கோழியிடம்.
   ரொம்பவும் குட்டிப் பாம்புகளாக இருந்தால், அவ்வளவுதான், கினிக்கோழியார் அப்படியே சாப்பிட்டு விடுவார். (அதாவது குட்டிப் பாம்பைக் கொத்தி, லபக்கென்று விழுங்கி விடுவார்).
   இதனால்தான் பாம்புகள் அதிகம் உலா வரும் பிரதேசங்களில் வசிப்பவர்கள், பாதுகாப்புக்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து கினிக் கோழிகளை வளர்க்கிறார்கள்.
   கினிக்கோழி பார்ப்பதற்கும் மிகவும் அழகாக இருக்கும்.
   -ரொசிட்டா
   
   
   
  அடுத்த வாரக் கேள்வி
  கலர் கலராக முட்டையிடும் பறவைகள்
  இருக்கின்றனவா?
   பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம் நல்ல பதில் கிடைக்கும்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai