சுடச்சுட

  
  9

   நாய்க்குப் பிறந்தால் நாய்க்குட்டி
   நரிக்குப் பிறந்தால் நரிக்குட்டி
   நாய்க்குட்டிக்கு இருக்கும் நன்றி
   நரிக்குட்டிக்கு இல்லையே!
   
   பாகற்கொடியில் பாகற்காய்
   பரங்கிக் கொடியில் பரங்கிக்காய்
   பாகற்காயில் உள்ள கசப்பு
   பரங்கிக் காயில் இல்லையே!
   
   பகலில் உதிக்கும் சூரியன்
   இரவில் உதிக்கும் சந்திரன்
   பகலின் வெயிலில் காணும் வெப்பம்
   நிலவின் ஒளியில் இல்லையே!
   
   ஒன்று போல மற்றொன்று
   இருக்குமாயின் நாமெல்லாம்
   மென்று தின்னும் உணவுக்கு
   சுவைகள் ஆறு கிடைக்குமா?
   
   - அழகு இராமானுஜன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai