சுடச்சுட

  
  16

  * ""பத்தொன்பது கழுதையை மூணு பேருக்கு சமமா பங்கு போடணும்னு ஒரு கணக்குடா''
   ""அதெப்பிடி முடியும்....! கணக்குல ஒரு கழுதை உதைக்குமே''
   ""எல்லாக் கழுதையும்தான் உதைக்கும்''
   ""அதெல்லாமில்லே....,ஒரு கழுதைதான் உதைக்கும்''
   வி.ரேவதி, 68,ராம் நகர், 4ஆவது தெரு, எம்.சி.ரோடு, தஞ்சாவூர்-613007.
   
  * ""உங்க பையன் பரீட்சையிலே எல்லா கேள்விகளுக்கும் பதில் எழுதிட்டு வந்தான்னு சொல்றீங்க..., பின்னே எப்படி ஃபெயிலாயிட்டான்?''
   ""எல்லா கேள்விக்குமே, பதில்..., பதில்...., பதில்னு அந்த வார்த்தையை மட்டும் எழுதிட்டு வந்திருக்கான்''
   அருள்மொழி சசிகுமார்,
   கம்பைநல்லூர்.
   
  * ""எங்க ஸ்கூல்லே தலைமை ஆசிரியர் 1..., தலைமை ஆசிரியர் 2..., தலைமை ஆசிரியர் 3...ன்னு மூணு பேர் இருக்காங்க...''
   ""என்னடா உளர்றே?''
   ""ஆமா அங்கிள்..., மூணு ஆசிரியர்கள் தலைக்கு கறுப்பு மை தடவி, "டை' அடிச்சுக்கிட்டு வருவாங்க''
   நாகராஜன், பறக்கை.
   
  * ""என்னது இது?..., இந்த டாக்டர்,... "பெரியசாமி, எம்.பி.பி.எஸ். மிதுன ராசி'ன்னு போர்டு போட்டிருக்கார்?''
   ""யாரோ ராசியில்லாத டாக்டர்னு சொல்லிட்டாங்களாம்''
   எஸ்.வேல் அரவிந்த், திண்டுக்கல்.
   
  * ""ஏன் உங்கப்பா தோட்டத்துக்கு தண்ணி ஊத்தறதுக்கு முந்தி மணி அடிக்கிறாரு?''
   ""அவரு "பயர் இன்ஜின்'லே வேலை பார்த்தவரு''
   வளர்மதி முத்து,
   திருச்சிற்றம்பலம்.
   
  * "என்ன ஜோஸியரே, கிளிக்கூண்டு ரொம்ப சின்னதா இருக்கு?''
   ""இது "வெட்டுக்கிளி' ஜோஸியமுங்க''
   ப.சரவணன்,
   123/103 வடக்கு அடை வளஞ்சான் தெரு,
   ஸ்ரீரங்கம்}620006.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai