சுடச்சுட

  
  1

  தகுதி!
   தொழிலாளர் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்ற விரும்பினார் குல்சாரிலால் நந்தா. அவரிடம் காந்தி, ""தொழிலாளிகளுக்குப் பணியாற்ற உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?'' என்று கேட்டார்.
   ""நான் ஒரு பட்டதாரி'' என்றார் நந்தா.
   ""அது போதாது. நீங்கள் முதலில் தொழிலாளியாக வேலை பார்க்க வேண்டும். அதுதான் முக்கியம்'' என்றார் காந்தி. அதோடு அகமதாபாத் ஆலை ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்க்க நந்தாவுக்குக் கடிதம் வழங்கினார். பல மாதங்கள் தொழிலாளியாக வேலை செய்த பிறகே தொழிலாளர் இயக்கங்களில் தொண்டாற்ற அனுமதி தந்தார் காந்தியடிகள்.
   முக்கிமலை நஞ்சன், எடக்காடு.
   
  முதல் வணக்கம்!
   குருநானக்கிடம் ஒருவர், ""உங்களுக்குக் கல்வி கற்றுத் தந்த ஆசிரியரையும், ஆண்டவனையும் ஒரே நேரத்தில் பார்த்தால் நீங்கள் யாருக்கு முதலில் வணக்கம் செலுத்துவீர்கள்'' என்று கேட்டார்கள்.
   அதற்கு ""ஆசிரியருக்கு முதலில் வணக்கம் செலுத்திவிட்டு பின்னர்தான் ஆண்டவனுக்கு வணக்கம் செலுத்துவேன். காரணம், ஆண்டவனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவரே ஆசிரியர்தானே'' என்றார் குருநானக்.
   ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.
   
  எங்கள் ஊர்!
   ஷெனாய் இசைக் கலைஞரான பிஸ்மில்லாகானிடம், அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், "நீங்கள் அமெரிக்காவிலேயே வந்து குடியேறுவீர்களானால் உங்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்'' என்று கூறினாராம். அதைக் கேட்ட ஷெனாய் வித்வான், சிரித்துக்கொண்டே எங்கள் ஊர் கங்கையையும், காசிவிஸ்வநாதரையும் அமெரிக்காவிற்குக் கொண்டு வர முடியுமா' என்று கேட்டாராம். இந்த ஆண்டு பிஸ்மில்லாகானின் பிறந்த நூற்றாண்டு (21.3.1916 } 21.8.2006) என்பது குறிப்பிடத்தக்கது.
   பரதன், திருவாரூர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai