சுடச்சுட

  
  3

  அம்மாதான் ஆசிரியர் (சிறுவர் பாடல்கள்)
  ஆசிரியர்: முனைவர் தி.நெல்லையப்பன்
  பக்கம்: 64; விலை: ரூ.150
   அம்மா, காற்றாடி, பம்பரம், பந்து, ஒட்டகம், ஐஸ் வண்டி போன்ற 32 தலைப்புகளில் சிறுவர்-சிறுமியருக்கான இனிய பாடல்கள். முனைவர் ச.வனிதா அணிந்துரையில் கூறியுள்ளது போல், இப்பாடல்கள் பெரியவர்களையும் குழந்தைகள் உலகுக்கு அழைத்துச்செல்கின்றன. வண்ணப் படங்களும், தரமான காகிதமும் கூடுதல் அழகு. (வெளியீடு: மணிபாரதி பதிப்பகம், 153.1/3 எஃப்-4,கனகசபை அடுக்ககம், பாரதிதாசன் சாலை, கனகசபை நகர், சிதம்பரம்-608 001).
   
  விளையாட்டு வழியில் கணக்கு
  ஆசிரியர்: வெ.வரதராஜன்
  பக்கம்: 112; விலை: ரூ.50
   புதுமையான நூல். பள்ளிக் குழந்தைகளுக்கு விளையாடும் பொருளாக கணக்கை ஆக்கித் தருகிறார், புதுடெல்லி கல்வி ஆராய்ச்சி விருது பெற்ற ஆசிரியர் வெ.வரதராஜன். ஒவ்வொரு விடுமுறையிலும் மாணவர்கள் கையில் இந்நூல் இருந்தால் போதும்; விளையாடிக்கொண்டே கணக்கு கற்கலாம். (வெளியீடு: அருள்மொழிப் பிரசுரம், ஸ்ரீவாரி அடுக்ககம், பழைய எண்:11, கவரைத் தெரு, மேற்கு சைதாப்பேட்டை, சென்னை-15).
   
  முஃபாராவின் அழகிய மகள்கள்
  ஆசிரியர்: தமிழில்: முத்தையா வெள்ளையன்
  பக்கம்: 88; விலை: ரூ.70
   அமெரிக்கா, ரஷ்யா, ஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள எழுத்தாளர்கள் சிறுவர்களுக்காக ஆங்கிலத்தில் எழுதிய சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு. மொத்தம் ஏழு கதைகள் உள்ளன. "ஒரு தொப்பி உயிரோடு இருக்கு' என்று ஒரு தலைப்பு. தலைப்பைப்போல் கதையும் சுவாரஸ்யம்.
   (வெளியீடு: மேன்மை, 5/2, பெர்தோ தெரு, இராயப்பேட்டை (கில் ஆதர்ஷ் பள்ளி அருகில்), சென்னை-14).
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai