சுடச்சுட

  
  8

  கூரை வீட்டுத் தாழ்வாரம்
   குருவிகள் கூடி இளைப்பாறும்!
   ஊரில் பாட்டி சொன்ன கதை
   ஒவ்வொன்றாக நினைவு வரும்!
   
   சிட்டுக் குருவிக் கூட்டங்கள்
   சிலிர்க்கும் கோழி மைனாக்கள்!
   வீட்டு வாசலில் தானியத்தை
   விழுங்கி மகிழ்ந்து விளையாடும்!
   
   சின்னத் தூக்கணாங் குருவிக்குத்
   தையற் கலையைச் சொன்னது யார்?
   இன்னும் குஞ்சுகள் இளைப்பாற
   இலவம் பஞ்சில் ஒரு மெத்தை!
   
   தகுந்த துணையுடன் அன்போடு
   அமர்ந்து அழகிய மரக்கிளையில்
   தன்னால் அமைத்த தனிக்கூட்டில்
   பரிவுட னிரை தரும் குஞ்சுகட்கு!
   
   -மா.கோவிந்தராஜன்
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai