சுடச்சுட

  
  13

   1. பாய் - இதைச் சுருட்டவும் முடியாது; பாக்கு } இவற்றை எண்ணவும் முடியாது!
   இவை என்ன?
   2. காட்டிலே இருக்கும் குடை, வீட்டில் இல்லாத குடை!
   அது என்ன?
   3. ரத்தத்தால் வளர்வது; ஆனால் ரத்தமே இல்லாதது! அது என்ன?
   4. பற்கள் பல உண்டு; ஆனால் கடிக்கத் தெரியாது!
   அது என்ன?
   5. தண்ணீரிலே நீந்தி வரும், தரையிலே தாவி வரும்,
   அது என்ன?
   6. மூன்று நிறக் கிளிகளாம், கூண்டிலே போட்டால்
   ஒரே நிறமாம், அது என்ன?
   7. குளம்படிச் சத்தக்காரன், போருக்கு கெட்டிக்காரன்! அவன் யார்?
   8. பச்சையாய் விரிஞ்சிருக்கு; காலம் வந்தால் மணிகளாகக் குவியும்.
   அது என்ன?
   9. தாளமில்லாத ஆட்டம், தாய்மார்கள் விரும்பாத ஆட்டம்! அது என்ன?
   10. கேடயமுள்ள வீரனுக்கு, வாள் இல்லை! இவன் யார்?
  விடைகள்:
   1. வானம், நட்சத்திரம்.
   2. காளான்
   3. நகம்
   4. சீப்பு
   5. தவளை
   6. தாம்பூலம் 7. குதிரை
   8. நெற்கதிர்
   9. சூதாட்டம் 10. ஆமை
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai