சுடச்சுட

  
  15

  கேள்வி: கலர் கலராக முட்டையிடும் பறவைகள் இருக்கின்றனவா?
   பதில்: கலர் கலராவா.... நிறையவே இருக்கின்றன. ஆனால், உடனே பச்சை, சிவப்பு, ஊதா என்று வானவில்லின் அத்தனை
   நிறங்களிலும் பறவைகள் முட்டைகள் போடும் நினைத்து விடாதீர்கள். டல்லாக இருக்கும் பிரவுன், சாம்பல், வெளிர் கருப்பு, இளம் மஞ்சள், இளம் பச்சை இப்படி மிகவும் மங்கலான நிறங்களில் மட்டுமே
   பறவைகள் முட்டைகள் இடுகின்றன.
   இந்த முட்டையின் வண்ணம் என்பது அவற்றைப் பாதுகாப்பதற்காக இயற்கை படைத்த மெக்கானிசம். எதிராளிகளிடமிருந்து முட்டைகள் பாதுகாப்பாக இருப்பதற்காக இயற்கை தந்த வரம், அதிசயம்.
   மரப்பொந்துகள், மண், மணல்வெளி, புல்வெளி, புதர் இடுக்கு என எத்தனையோ இடங்களில் பறவைகள் முட்டையிடுகின்றன. இடப்படும் சூழலோடு, அதன் நிறம் ஒத்துப் போனால்தான், முட்டைகள் பாதுகாப்பாக இருக்கும்.
   தரையில் சுரங்கம் போலத் தோண்டியும், மரப் பொந்துகளிலும் முட்டையிடும் பறவைகள் ஏரியல், உஜாலா போன்ற விளம்பரங்களில் வரும் வெண்மை நிறத்தைப் போல சுத்தமான வெண்ணிறத்தில் முட்டையிடுகின்றன. ஏனென்றால், அந்த முட்டைகள் எதிராளிகளின் கண்ணில் படாத வகையில் பாதுகாப்பாகவே இருக்கின்றன.
   ஆனால், வெட்டவெளியில், மண் தரையில் முட்டையிடும் ஆள்காட்டிப் பறவையின் முட்டை, மண்ணின் நிறத்திலேயே இருக்கும். மணல்வெளியில் முட்டையிடும் கடல் குருவியின் முட்டை மணலின் நிறத்தில் இருக்கும்.
   இப்படி ஒவ்வொரு பறவையும் தான் முட்டையிடும் இடத்துக்கேற்ற வகையில், அந்தச்சுற்றுப்புறத்தில் அதிகமாகக் காணப்படும் நிறத்திலேயே முட்டைகள் இடுகின்றன. இதனால்தான் அவற்றின் முட்டைகள் பாதுகாப்பாக இருக்கின்றன. இதையும் தாண்டி சில முட்டாள் பறவைகள் வெட்டவெளியில் பளிச்சென்ற வெள்ளை
   நிறத்தில் முட்டையிட்டு, தங்கள் முட்டைகளைப் பறிகொடுக்கும் நிகழ்வும் நடக்கத்தான் செய்கிறது.
   -ரொசிட்டா

  அடுத்த வாரக் கேள்வி
   கழுதைப் புலிகள் கூட்டமாக வந்தால், சிறுத்தை பயந்து ஓடி விடுமாமே, உண்மையா?
   பி.கு.: இந்தப் பகுதிக்கு வாசகமணிகளும் கேள்விகளை அனுப்பலாம். இதுவரை இந்தப் பகுதியில் வெளிவராத கேள்விகளாக இருந்தால், நிச்சயம் நல்ல பதில் கிடைக்கும்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai