சுடச்சுட

  
  16

  * ராத்திரியிலே கொசுக்கடியிலிருந்து தப்பிக்க "குட் நைட்' வைக்கிறாங்க...,இப்ப பகல்லேயும் கொசு கடிக்குது... என்ன பண்றது?''
   ""..."குட் மார்னிங்'...வெச்சுப் பாரு!''
   பி.சரவணன்,
   ஸ்ரீரங்கம்.
   
  * ""உலக அதிசயங்கள் ஏழுதானே சார்...? நீங்க எட்டுன்னு சொல்றீங்களே...எப்பிடி சார்?''
   ""உலக அதிசயங்கள் ஏழுதான்....அதை நீ கரெக்டா சொன்னியே....அதுதான் அந்த எட்டாவது அதிசயம்!''
   வி.ரேவதி,
   68,ராம் நகர்,
   4ஆவது தெரு, எம்.சி.ரோடு,
   தஞ்சாவூர்-613007.
   
  * ""நிமிந்து நின்ன அவருடைய வியாபாரம் இப்ப படுத்திருச்சு''
   ""எப்பிடி?''
   ""முதல்லே "தொப்பி' வியாபாரம் செஞ்சாரு...,இப்ப "பாய்' விற்கிறாரே''
   சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
   
  * ""லட்டுக்கும், புட்டுக்கும் என்ன வித்தியாசம் சொல்லு பார்க்கலாம்?''
   ""நீயே சொல்லு''
   ""லட்டைப் புட்டு சாப்பிடலாம்...! ஆனை புட்டை லட்டு சாப்பிட முடியாது''
   க.சங்கர்,
   நாகர் பாளையம்.
   
  * ""ரெண்டு வாய்தான் இருக்கு....சாப்பிட்டுக்கோடா செல்லம்''
   ""எங்க ரெண்டு வாய் இருக்கு....? ஒரு வாய்தானே இருக்கு....எப்பிடிம்மா முடியும்?''
   எஸ்.அருள்மொழி சசிகுமார், கம்பைநல்லூர்.
   
   * ""ஸ்கூல் பையை நீதாண்டா தூக்கணும்...தாத்தாவாலே முடியாதில்லே....''
   ""சரி, தாத்தா...! அப்போ என்னைத் தூக்கிக்கோ''
   ""ம்....வேண்டாண்டா பையே குடு....தூக்கிக்கிறேன்''
   தீ.அசோகன்,
   நடராஜ தோட்டம், முதல் தெரு,
   திருவொற்றியூர், சென்னை-19.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai