சுடச்சுட

  
  3

  நான் இன்னும் சாகவில்லை
   
  புகழ்பெற்ற அமெரிக்க நகைச்சுவை எழுத்தாளர் மார்க் டூவெயின் உடல்நலமில்லாமல் படுத்த படுக்கையானார். ஒரு நாளேடு அவர் மரணம் அடைந்தாரென்று செய்தி வெளியிட்டது, என்றாலும் மருத்துவர்களின் தீவிர முயற்சியால் அவர் பிழைத்து எழுந்தார்.
   பத்திரிகைச் செய்தியை அவரே படிக்க நேர்ந்தது. அதனால் அதிர்ச்சி எதுவும் அடையவில்லை. செய்தி வெளியிட்ட நாளேட்டுக்கு "மார்க்டூவெயின் ஆகிய நான் இன்னும் சாகவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கடிதம் எழுதி அனுப்பி வைத்தார்.
   அதன் பின்னரும் பல ஆண்டுகள் வாழ்ந்து
   75-ஆம் வயதில் காலமானார் மார்க்டூவெயின்.
   முக்கிமலை நஞ்சன், எடக்காடு.
   
  கால்களினால் தேர்வு எழுதியவர்
   யாதவ் மெஷ்ராம் என்பவர் நாகபுரியைச் சேர்ந்த தம்சார் என்ற ஊரினர். பிறந்ததிலிருந்தே இரு கைகளும் இல்லாதவர். அங்கஹீனர்களுக்கு அனுமதிக்கப்படும் ஓர் உதவியாளரைக் கொண்டு எழுதாமல் பி.யு.சி. வகுப்பு (பிரியுனிவர்ஸிடி) தேர்வைத் தனது கால்கட்டை விரல்களுக்கு இடையில் பேனாவைச் செலுத்தி தானே எழுதி முடித்தார்.
   இவருடைய எழுத்துக்கள் அழகாகவும், தெளிவாகவும் ஒரே சீராகவும் இருந்தன. தேர்வுக்கு அவருக்கென தனி அறை ஒன்றும் பெஞ்சும் அளிக்கப்பட்டன. அவர் அதிக மார்க்குகள் பெற்றுத் தேர்ந்தார்.
   ஆதினமிளகி, வீரசிகாமணி.
   
  ஆடுதுறை
   ஒருமுறை ஆடுதுறை ரயில் நிலையத்திலிருந்து திருப்பனந்தாளுக்கு மாட்டுவண்டியில் வந்து சேர்ந்தார் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர்.
   சாலை மேடும் பள்ளமுமாக இருந்ததால் வண்டியில் ஆட்டம் அதிகமாக இருந்தது. தமிழ்த்தாத்தா வந்ததும் சொக்கலிங்கத் தம்பிரான் ""ஐயா சாலையில் குண்டுகுழிகள் அதிகம். வண்டி மிகவும் ஆட்டம் கொடுத்திருக்குமே?'' என்று கேட்டார்.
   ""ஆமாம்! ""ஆடுதுறை அல்லவா இது!'' என்று உ.வே.சா சொன்னதும் அனைவருமே சிரித்து மகிழ்ந்தார்கள்.
   நெ.இராமன், சென்னை.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai